சாய்னா நேவால் தன் கணவருக்கு ‘பெப்பபே’ சொல்லி விட்டார்!
இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் சக பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பிடம் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளார். ஏழு ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண உறவு முடிவுக்கு வருகிறது.
சாய்னா நேவால், ஜூலை 13, 2025 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செய்தியைப் பகிர்ந்து, இந்த முடிவை உறுதிப்படுத்தினார். அதில், “வாழ்க்கை சில சமயங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. பல சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு, நானும் காஷ்யப் பாருபள்ளியும் பிரிந்து செல்வது என்று முடிவு செய்துள்ளோம். எங்களுக்கும் ஒருவருக்கொருவர் அமைதி, வளர்ச்சி மற்றும் குணமடைதலைத் தேர்வு செய்கிறோம். நினைவுகளுக்காக நான் நன்றியுள்ளவள், மேலும் முன்னோக்கிச் செல்வதற்கு சிறந்ததை மட்டுமே விரும்புகிறேன். இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையைப் புரிந்துகொண்டு மதித்ததற்கு நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார்.
சாய்னா நேவால் (35) மற்றும் பாருபள்ளி காஷ்யப் (38) இருவரும் புல்லேலா கோபிசந்த் அகாதமியில் பயிற்சியாளராக இருந்து, நீண்டகாலமாகப் பழகி வந்தனர். இவர்களது காதல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்த நிலையில், 2018 டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர். சாய்னா 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று உலக சாதனை படைத்தவர், அதேசமயம் காஷ்யப் 2014 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றவர்.
இந்த அறிவிப்பு விளையாட்டு உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்யப் இன்னும் இது குறித்து எந்தவித பொது அறிவிப்பும் வெளியிடவில்லை.


