சினிமா படப்பிடிப்புகளை நடத்துவதற்கான புதிய நடைமுறைகள் – மத்திய அரசு வெளியிட்டது!

சினிமா படப்பிடிப்புகளை நடத்துவதற்கான புதிய நடைமுறைகள் – மத்திய அரசு வெளியிட்டது!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை சினமா ஷூட்டிங் நடத்தப்படவில்லை. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசுக்கும், அந்தந்த மாநில அரசுகளுக்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலதரப்பில் இருந்தும் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ஜவடேகர், மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறை களை கடைபிடித்தால் சினிமா ஷூட்டிங் நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளார். அதிகபட்சம் 30 நிபந்தனைகள் –அடுக்கடுக்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நடைமுறைகளில் இடம் பெற்றுள்ளன.

* படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

* 6 அடி சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

* குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும்.

* படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது.

* மைக் போன்ற பொருட்களை பயன்படுத்திய பிறகு நன்றாக சுத்தப்படுத்த வேண்டும்.

* உடைகள், விக், ஒப்பனை பொருட்களை பகிர்ந்து கொள்வதை முடிந்து அளவிற்கு தவிர்க்க வேண்டும்.

* கேமரா முன் நிற்கும்போது தவிர நடிகர் – நடிகைகள் மற்ற நேரங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்.

* உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கையுறை கட்டாயம்.

* ஒப்பனை கலைஞர்கள் பாதுகாப்பு கவசம் அணிய வேண்டும்.

* வெளிப்புற படப்பிடிப்பின்போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* ‘தெர்மல் ஸ்கேனிங்’ அவசியம் (காய்ச்சல் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் கருவி மூலம் நடத்தும் சோதனை)

* படப்பிடிப்பு தளங்களில் பணிபுரிபவர்கள் உட்கார்வதிலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.

* படப்பிடிப்பு தளத்தை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்திகரித்துக் கொண்டிருக்க வேண்டும்.

பாசிட்டிவ் இருந்தால்…

 

* படப்பிடிப்பு தளத்தில் யாருக்காவது ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருந்தால் உடனடியாக படப்பிடிப்பு தளத்தை சுத்திகரிக்க வேண்டும்.

* யாருக்காவது கொரோனா லேசான அறிகுறி தெரிய வரும் பட்சத்தில்… அல்லது சந்தேகமாக இருக்கும் பட்சத்தில்… அவர்கள் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

* பாடல் பதிவு செய்யப்படும் இடங்கள் (ரெக்கார்டிங் ஸ்டூடியோ), படத்தொகுப்பு அறைகள் (எடிட்டிங் ரூம்) ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு இடையில் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

* காமிரா இருக்கும் இடத்திலிருந்து ஸ்டார்ட் – கட் சொல்லும் டைரக்டர் – காமிராமேன், உதவியாளர்கள், நடிகர்களுக்கு இடையில் இடைவெளி இருக்க வேண்டும்.

* பார்வையாளர்கள் வராதபடி உள்ளூர் நிர்வாகத்தை (போலீஸ்) பக்கத்தில் வைத்துக் கொண்டு படப்பிடிப்பை நடத்த வேண்டும்.

* ஓய்வெடுக்கும் போது அறைகளில் தங்கியிருக்கும் போதும் இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

* செட்டிலும், மேக்கப் அறையிலும், கழிவறைகளிலும் அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்திகரிக்க வேண்டும்.

* கையுறை, முகக்கவசம், தனி நபர் கவச உடை போதுமான அளவில் இருக்க வழி காணப்பட வேண்டும்.

* ஒப்பனைக் கலைஞர்கள் (மேக்கப் கலைஞர்கள்), சிகை அலங்கார (ஹேர்ஸ்டைலிஸ்ட்) கலைஞர்கள் தற்காப்பு கவச உடை அணிந்திருக்க வேண்டும்.

* ஷூட்டிங்கின் போது ரசிகர்களை அனுமதிக்க கூடாது.

* உடைகள், விக், ஒப்பனை பொருட்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

* உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கையுறை கட்டாயம்.

* வெளிப்புற படப்பிடிப்புகளின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* பயன்படுத்தும் படப்பிடிப்பு தள உடைமைகளுக்கு அவ்வப்போது கிருமி நாசினி தெளித்து பயன்படுத்த வேண்டும்.

* படப்பிடிப்பு முடிந்து ‘பேக்அப்’ ஆகும் போதும் கூட்டமாகக் கூடி இருப்பது கூடாது; சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

* படப்பிடிப்பு தளத்துக்கான நுழைவாயிலில் பரிசோதனை கண்டிப்பாய் நடத்தப்பட வேண்டும்.

‘ஆரோக்ய – சேது’ செயலி

* ஆரோக்ய – சேது செயலி பதிவிறக்கம் செய்து வைத்திருப்பதும் நல்லது

* உணவு இடைவேளை நேரத்திலும் சாப்பாட்டுக்கு க்யூவில் வரும் போது சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

இப்படி அடுக்கடுக்காக சுமார் 30 நிபந்தனைகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அமைச்சர் இன்று வெளியிட்டார்.

Related Posts

error: Content is protected !!