கர்நாடகா வங்கியில், புரொபேஷனரி அதிகாரி ஜாப் ரெடி!
கர்நாடக மாநிலம் மங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் துறை வங்கியான கர்நாடகா வங்கியில், புரொபேஷனரி அதிகாரி பிரிவைச் சார்ந்த பல்வேறு இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள்: அக்ரிகல்சுரல் பீல்டு ஆபிசர்ஸ், லா ஆபிசர்ஸ், ரிலேஷன்ஷிப் மேனேஜர்ஸ் என்ற பிரிவுகளின் கீழ் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது ஜன., 1, 1990க்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 வருட சலுகை உள்ளது.
கல்வித் தகுதி : அக்ரி பிரிவுக்கு இதே பிரிவில், அக்ரிகல்சுரல் சயின்ஸ் சார்ந்த பட்டப் படிப்பு தேவைப்படும். லா ஆபிசர்ஸ் பிரிவுக்கு சட்டத்தில் பட்டப் படிப்பு தேவைப்படும். ரிலேஷன்ஷிப் மேனேஜர் பதவிக்கு, எம்.பி.ஏ., படிப்பை மார்க்கெட்டிங்கில் படித்திருப்பது தேவைப் படும். சரியான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The Deputy General Manager (HR & IR),
Karnataka Bank Limited, Head Office,
Mahaveera Circle, Kankanady,
Mangaluru- 575002
கடைசி நாள்: மார்ச் 20, 2018
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு



