எல்.ஐ.சி. நிறுவனத்தில் பட்டத்தாரிகளுக்கு உதவியாளர் வேலை வாய்ப்பு!
நாடு முழுவதும் 8 மண்டலங்களாக விரிந்துள்ள எல்ஐசி நிறுவனம், 8 மண்டலங்களிலும் காலியாக உள்ள மொத்தம் 8,500 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெற்கு மண்டலத்தின் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு, திருவனந்தபுரம், திருச்சூர், திருநெல்வேலி, வேலூர் ஆகியவற்றுக்கான பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 8,500
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,435 – ரூ.40,080
வயது வரம்பு: 01.09.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இவை அனைத்திலும் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://licindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நுழைவுச் சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படும் தேதி: 15.10.2019 முதல் 22.10.2019
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 2019, அக்டோபர் 21, 22
முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பதிவு தொடங்கும் தேதி: 17.09.2019
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2019