32°C
விளம்பரம்
Advertisement

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை நடைமுறையில் RTGS, NEFT கட்டணங்கள் நீக்கம்!

admin சேலம் Published: June 6, 2019 2 நிமிட வாசிப்பு Updated: June 8, 2019 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




ஆன்லைன் வர்த்தகம் என்பது இந்தியாவில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் அனைவராலும் அடையாளம் காணும் அளவுக்கு உயர்ந்துள்ளன. இருப்பினும் இன்னும் தங்களை முழுவீச்சில் செயல்படவிடாமல் தடுக்கும் விஷ்யங்களில் ஒன்றான ஆன்லைன் பணப் பரிவர்த்தனை நடைமுறையில் RTGS, NEFT கட்டணங்கள் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதாவது நம்ம மோடியின் பணமதிப்பழிப்பு அறிவிப்பு  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகிலி ருந்தே இந்தியா வில் ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாக மேற்கொள்ள அரசு தரப்பிலிருந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு படியாக, ஆர்டிஜிஎஸ் (RTGS – Real Time Gross Settlement) மற்றும் நெஃப்ட் (NEFT – National Electronic Fund Transfer) பரி வர்த்தனைகளில் உள்ள கட்டணங்களை மத்திய ரிசர்வ் வங்கி நீக்குவதாக இன்று (ஜூன் 6) அறிவித்துள்ளது. எனவே, இதற்கான பயனை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர் களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.

RTGS முறையில் வங்கி வேலை நேரத்தில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். அதேபோல, NEFT முறையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குக் குறிப்பிட்ட அளவிலான பணத்தை மட்டுமே அனுப்ப முடியும். RTGS முறையில் ரூ.2 லட்சம் மற்றும் அதற்கு மேலான தொகையை அனுப்ப முடியும். இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில், NEFT பரிவர்த்தனைகளுக்கு ரூ.1 முதல் ரூ.5 வரையிலும், RTGS பரிவர்த்தனை களுக்கு ரூ.5 முதல் ரூ.50 வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இக்கட்டணங்கள் வசூலிக்கப்படாது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் இன்று நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 சதவிகிதத்திலிருந்து 5.75 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்