தேசிய விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது!
தேசிய விருதுகளுக்கான பொது இணையதளத்தை (https://awards.gov.in) அரசு வடிவமைத்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், முகமைகளின் விருதுகள் குறித்த விவரங்கள் ஒரே தளத்தில் இடம் பெறச் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் பங்களிப்புடன் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். ஒவ்வொரு குடிமகனும் அல்லது அமைப்பும் மத்திய அரசின் பல்வேறு விருதுகளுக்காக தனிநபர்களையோ அல்லது அமைப்புகளையோ பரிந்துரை செய்வதற்கான வசதிகள் இத்தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது பின்வரும் விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
பத்ம விருதுகள் – கடைசி நாள் 15.09.2022
டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2022 – கடைசி நாள் 15.09.2022
தேசிய நீர் விருதுகள் 2022 – கடைசி நாள் 15.09.2022
வன உருவாக்கத்தில் சிறந்த செயல்பாட்டுக்கான தேசிய விருது
– கடைசி நாள் 30.09.2022
தேசிய கோபால் ரத்னா விருது – கடைசி நாள் 30.09.2022
மகளிர் சக்தி விருது 2023 – கடைசி நாள் 31.10.2022
சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருது 2023
– கடைசி நாள் 30.09.2022
மனித உயிரை பாதுகாத்ததற்கான விருது – கடைசி நாள் 30.09.2022
மேலும் விவரங்களுக்கும் விண்ணப்பிக்கவும் https://awards.gov.in என்ற தேசிய விருது இணையப்பக்கத்தைக் காணவும்.
*****