கொரோனா II: மாநில அரசுகள் என்ன செய்யலாம்? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

கொரோனா II: மாநில அரசுகள் என்ன செய்யலாம்? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை உருவாக்குகிறது; மரணங்களை ஏற்படுத்துகிறது என்று நடிகர் மன்சூர் அலிகான் குற்றஞ்சாட்டியதை அடுத்து இப்போது பரவலாக இரண்டு கட்சிகளாகப் பிரிந்து சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வாதங்கள் நடைபெறுகின்றன. உண்மையில் என்ன நடக்கிறது? சென்றாண்டு இதே நாட்களில் முதல் நோய்த்தொற்று ஏற்பட்ட போது மக்களிடத்தில் காணப்பட்ட பதற்றம் இப்போது இல்லை. ஏன் இல்லை? தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் இறந்துள்ளனர்? ஏன் இறந்தனர்? தடுப்பூசி காரணமா? இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்ன நினைக்கிறார்கள்? தொடர்ந்து பரவும் நோய்த் தொற்றை எப்படி தடுப்பது?

இப்படியான கேள்விகள் ஒருபுறம் என்றாலும் ஒட்டுமொத்த கொரோனாவும் சர்வதேச சதி என்றும், பன்னாட்டு நிறுவனங்கள் காசு பார்க்க அவிழ்த்து விட்டக் கட்டுக்கதை என்றும் பலர் விவாதிக்கின்றனர். இது மற்றொருபுறம். இது தவிர இதுவரை காரணம் தெரியாத நோய்த் தொற்று ஒன்றினால் பல வி ஐ பிக்கள் இறந்துள்ளனர். கொரோனா தொடர்பான மரணங்களை இப்படி சொல்ல முடியுமா? உலகம் முழுதும் ஏற்றுக் கொண்ட ஒரு நோய்த் தொற்றை எப்படி சதி என்று அலட்சியப்படுத்த முடியும்? சதியாக இருக்கலாம். யாருடைய சதி? நோய் தோன்றிய இடமான சீனாவின் சதியா? இருக்கலாம். சீனாவில் இந்நோயின் தீவிரம் குறைவு. அல்லது வேகமாக தடுக்கப்பட்டு விட்டது. எப்படி என்பது தெரியாது. உலக சுகாதார நிறுவனத்திற்கே கூடத் தெரியாது. அப்படி இல்லை என்றால் சீன அரசு எதையோ மறைக்கிரது. சமீப காலங்களில் சீனா தனது உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு கோரிக்கை வைத்துள்ளது சீனா. வியட்நாம் உட்பட தனது அண்டை நாடுகளிடமும் அரிசி வாங்குகிறது சீனா. உலகிலேயே சீனாவில்தான் அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு 6.5 டன்களாக அரிசி உற்பத்தி இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஏன் அரிசி இறக்குமதி? இது தவிர உலக சுகாதார நிறுவனத்திற்கு பல முக்கியத் தகவல்களை சீனா தரவில்லை!

சரி, இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு செயல்படுகின்றன? மத்திய அரசு போதுமான நிதியை மாநிலங்களுக்கு அளித்துள்ளதா? இல்லை. இதில் பின்னடைவுதான். தடுப்பூசியை இலவசமாக வழங்குகிறது. பிற கொரோனா தடுப்பு மருந்துகளையும், சோதனைக் கருவிகளையும் வழங்கியது. இப்போது தனியாரை தடுப்பூசி மற்றும் மருந்துகள் உற்பத்திக்காக முடுக்கி விட்டுள்ளது. வயது வந்தோர் அனைவருக்கும் தடுப்பூசி எனும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டாம் அலை நோய்த் தொற்றிற்கு என்னக் காரணம் என்பது புரிபடவில்லை, சில மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள், மத விழாக்கள், முழுமையான போக்குவரத்து போன்றவை காரணம் என்றால் இவையெல்லாம் அதிகம் நடைபெறாத மாநிலங்களில் மிக அதிகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

முதல் அலையின் போது வெறும் முழு அடைப்பை நடத்தினால் போதும் என்று கருதிய மாநிலங்களே இப்போது மாட்டிக்கொண்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இருந்து உள்ளூர் மக்கள் திரும்பிய போது ஏற்பட்டத் தொற்று இப்போது வீரியம் அடைந்துள்ளது. மராட்டிய மாநிலம் இரண்டு அலைகளின் போதும் முதலிடத்தில் இருக்கிறது. அம்மாநிலம் முற்றிலும் பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்தவில்லை. இந்தியாவில் இப்போது பரவி வரும் புதிய வகை (ம்யூடெண்ட் வகை) கொரோனா எங்கு தோன்றியது என்பதும் தெரியவில்லை. டெல்லியில் மிக அதிகமாக பரவி வரும் கொரோனா முதல் அலையிலும் தீவிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் அலையையும் வெற்றிக் கொள்ள மாநில அரசுகள் ஊரடங்கை மட்டும் நம்பாமல் பிற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொது முடக்கத்தால் இழந்த பொருளாதார நடவடிக்கைகள் இன்னும் திரும்பவில்லை. இந்நிலையில் மீண்டும் முடக்கம் சாத்தியமில்லை. மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில் கொரோனா தடுப்பு சாத்தியமில்லை. ஒரு நாள் மாற்றி மற்றொருநாள் வேலை நாட்களை வகுத்துக் கொள்ளலாம். வாரம் ஒருமுறை விடுப்பு. அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும். இப்படியொரு வழிமுறை மூலமே நோய்த் தொற்றை தவிர்க்க முடியும். கடைகள், வர்த்தக நிறுவனங்களை வாரம் மூன்று நாட்கள் மட்டும் இயங்கச் செய்யலாம். ஏற்கனவே இணையவழியில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை தொடர்ந்து இயங்கி வரலாம். அரசு இப்படியான மாற்றங்களை செய்தால்தான் நோய்த் தொற்றைக் குறைக்க அல்லது தடுக்க இயலும்.

error: Content is protected !!