ரஜினி நடிப்பில் தயாராகி உள்ள ‘காலா’ வரும் ஜூன் 7ல் ரிலீஸ்!
மெட்ராஸ், அட்டக்கத்தி ஆகிய ஹிட் படங்களை கொடுத்தும் “கபாலி” மூலம் உலகெங்கும் பரீட்சயமானவனருமான பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலிவுட்டின் அடசய பாத்திரமான ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் கூட்டணியில் கபாலிக்குப் பிறகு உருவாகியுள்ள படம் ‘காலா’.நடிகர் தனுஷ் இந்தப் படத்தினை தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.
முன்னதாக இந்த காலா திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் திடீரென்று சினிமா துறை போராட்டம் நடத்தியதால் புதுப்படங்ள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்த இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து புதுப்படங்கள் ரிலீஸ் இன்று (ஏப் 2ம்) முதல் தொடங்கியது.
தற்போதைய நிலையில் ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட படங்கள் சென்சார் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக இருப்பதால் காலா படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.இதனை தொடர்ந்து
தற்பொழுது ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் ஜூன் 7-ம் தேதி வெளியிடப்படும் என்று அதன் தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.




