ரயில்வே ஐஆர்சிடிசியில் வேலை: 43 காலிப் பணியிடங்களுக்கு ‘வாக்கின் இன்டர்வியூ
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி (IRCTC), தனது மேற்கு மண்டலத்தில் (West Zone) காலியாக உள்ள 43 ‘ஹாஸ்பிடாலிட்டி மானிட்டர்’ (Hospitality Monitors) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும்.

பணியின் விவரங்கள்:
-
பதவியின் பெயர்: ஹாஸ்பிடாலிட்டி மானிட்டர் (Hospitality Monitors).
காலியிடங்கள்: மொத்தம் 43 இடங்கள் (இதில் இட ஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படும்).
-
சம்பளம்: மாதம் ரூ. 30,000 (சிடிசி). அத்துடன் ரயிலில் பணியில் இருக்கும்போது தினப்படி படியாக ரூ. 350 வரை வழங்கப்படும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
-
கல்வித்தகுதி: பி.எஸ்சி (Hospitality and Hotel Administration / Hotel Management and Catering Science) அல்லது பிபிஏ / எம்பிஏ (Culinary Arts / Tourism and Hotel Management) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21.01.2026 தேதியின்படி, பொதுப் பிரிவினர் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
அனுபவம்: இந்தப் பணிக்குத் தகுதியான கல்வித்தகுதி கொண்ட புதியவர்களும் (Freshers) விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு (Walk-in Interview) மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்கள் மற்றும் தேதிகள்: விருப்பமுள்ளவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு இடத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்:
-
போபால் (மத்திய பிரதேசம்): பிப்ரவரி 17, 2026.
-
மும்பை (மகாராஷ்டிரா): பிப்ரவரி 24, 2026.
-
கோவா: பிப்ரவரி 27, 2026.
-
அகமதாபாத் (குஜராத்): மார்ச் 05, 2026.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளவர்கள் www.irctc.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், தேவையான கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் குறிப்பிட்ட தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டும்.
முக்கியக் குறிப்பு: தேர்வு செய்யப்படுபவர்கள் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், கோவா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம். மேலதிக விவரங்களுக்கு ஐஆர்சிடிசி இணையதளத்தைப் பார்க்கவும்.


