ராங்கி- விமர்சனம்!

ராங்கி-  விமர்சனம்!

ண்மையில் நம் ஆந்தை டீம் நண்பர் ஒரு இணைய தளத்துக்காக அனுப்பிய ரிப்போர்ட்டிங்கில் ‘கணினி யுகத்தின் இணையற்ற கண்டுபிடிப்பான இணையம் என்ற இன்டர்நெட், தகவல் தொடர்பு சாதனங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பிள்ளைகளான மின்னஞ்சல், முகநூல், வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் கண்டுபிடிப்பின் பலனையே மாற்றிவிட்டது.நட்புக்கும் உறவுக்கும் தொழில் வணிக தொடர்புக்கும், வேலை வாய்ப்புக்கும் வெளித் தொடர்புக்கும் ஏதுவான இந்த சமூக வலைத்தளங்கள் மோசடி கும்பல்களிடம் சிக்கி சமூக விரோத தளங்கள் ஆகிவிடுமோ என்று கவலைப்படும் வகையில் தவறான பொய்யான தகவல் அவதூறு செய்திகள் மற்றும் ஆபாச படங்களை தாங்கி நிற்கின்றன. அதை விட நம் சோசியல் மீடியா தொடர்பு மூலம் நாலாம் உலகப் போரையே உருவாக்க இயலும்  என்ற எச்சரிக்கை குறியீட்டை சொல்லும் இன்னொரு வடிவமே ‘ராங்கி’.!

அதாவது ஆன்லைன் மீடியா ஒன்றில் ஜர்னலிஸ்ட் தையல்நாயகி (த்ரிஷா)யின் அண்ணன் மகள் சுஷ்மிதா (அனஸ்வரா ராஜன்). இவர் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு ஒன்று இயக்கப்படுவதைக் கண்டறிகிறார். அந்த பேஜில் இருந்து சுஷ்மிதா படத்தை நீக்க நினைக்கும் தையல்நாயகி, அந்த போலி கணக்கில் இருப்பவன் யார் என்று தெரியாமலே உரையாடத் தொடங்குகிறாள். சுஷ்மிதா என்று நினைத்து அவனும் பேசிக் கொண்டிருக்கிறான். தொடர்ந்து சாட் செய்யும் போது எதிராளி ஒரு தீவிரவாதி என்று தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் அவன் விரித்த வலையில் தையல்நாயகியும் சுஷ்மிதாவும் பகடைக்காய் ஆக்கப்படுகிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? நடந்த சதி என்ன? அது என்னாச்சு? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதே ராங்கி கதை

ராங்கி என்றால், குஷி படத்தில் விஜயகுமார் சொல்வாரே, ‘அகம்பிடித்த கழுதை, திமிர் பிடிச்சது’ என்றெல்லாம்; அப்படியான பொருள், அதற்கும் உண்டு. ஆனால், இங்கு ராங்கி என்பதை துணிவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த தலைப்புக்கு ஏற்ற துணிச்சலான பெண் பத்திரிகையாளர் தையல் நாயகியாக வருகிறார் த்ரிஷா. நடை உடை பாவனைகளில் உடல்மொழியில் தனி அலட்சியம், போலீஸூடன் அநாயசமான மோதல் போக்கு என த்ரிஷாவுக்குப் பெருமை சேர்க்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. புல்லட்டில் அவர் பயணிப்பதும். லிபியாவில் நடைபெறும் துப்பாக்கிச் சண்டைக்கு நடுவில் த்ரிஷாவின் சிறப்பான செயல்கள் அவரை முழுமையான ஆக்‌ஷன் நாயகியாக ஆக்கியிருக்கின்றன. த்ரிஷாவின் அண்ணன் மகள் சுஷ்மிதாவாக வரும் அனஸ்வரா ராஜனின் அப்பாவித்தனம் அந்த கதாபாத்திரத்துக்கு பலம். தன்னை மையமாக

சத்யாவின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலுசேர்க்கிறது. சக்திவேலின் ஒளிப்பதிவும் சுபாரக்கின் படத்தொகுப்பும் கதையின் தன்மைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கின்றன.

ஆரம்ப பேராவில் சொன்னது போல் சமூக ஊடகங்களின் மூலம் இளம்பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் சர்வதேச எண்ணெய் வள அரசியலையும் தொடர்புபடுத்தி சுவாரசியமான கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அதற்கு கச்சிதமான இரண்டு மணி நேரத் திரைக்கதையை அமைத்து ஆங்காங்கே மிகக் கூர்மையான வசனங்களையும் எழுதி இயக்கியிருக்கிறார் எம்.சரவணன். உலக அரசியல், அரசியல், டெக்னாலஜி, காதல் என மூன்று வெவ்வேறு விஷயங்களை ஒன்றாக கோர்த்து ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய கருத்தை மிக அழகாகவும், ஆழமாகவும் சொல்ல முயன்றுள்ளார் இயக்குநர்.ஆனால் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்..

ஆனாலும் இந்த ராங்கி – கவர்கிறாள்

மார்க் 3/5

error: Content is protected !!