பி. வி, சிந்துக்கு சப் – கலெக்டர் போஸ்ட்! – சந்திரபாபு நாயுடு வழங்கினார்!
ஒலிம்பிக் பேட்மிண்டனின் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு நேற்று ஆந்திர அரசு சப்-கலெக்டர் பதவி வழங்கி கவுரவப்படுத்தியது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் அசத்தலாக விளையாடிய பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரை கவுரவப்படுத்தும் விதமாக தெலுங்கானா அரசு ரூ.5 கோடி பரிசுத்தொகையும், குடியிருப்பு பகுதியும் வழங்கி கவுரவப்படுத்தியது. மேலும் அரசு பணியை வழங்குவதாக தெரிவித்தது.
இதனிடையே சென்ற 2013ஆம் ஆண்டு முதல் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடட்-இல் துணை மேலாளராக சிந்து பணியாற்றி வந்தார். அதே சமயம் ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சப்-கலெக்டர் பதவி வழங்குவதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து நேற்று பி.வி. சிந்து ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து நியமன கடிதத்தை அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் பெற்றுக்கொண்டார். 30 நாட்களில் சப் கலெக்டர் பணியை தொடங்கவுள்ளார் என்றும் தகவல் தெரியவந்துள்ளது.


