வாட்ஸ் அப்-பை விட அட்வான்ஸான ஆப் – கைசாலா! – மைக்ரோசாப்ட் தயாரிப்பு-
சமூக வலைதளங்களில் முக்கிய செயலியான வாட்ஸ்அப் உலகம் முழுக்க 100 கோடி பயனர்களைக்கொண்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் தினமும் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 5,500 கோடி குறுஞ்செய்திகளும், 100 கோடி வீடியோக்களும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. மாதந்தோறும் 130 கோடி பேர் 60 மொழி களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். தினமும் 450 கோடி படங்கள் உலகம் முழுக்கப் பகிரப்படுவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வாட்ஸ் ஆப் க்கு போட்டியா புதுசா கைசாலா (Kaizala) எனும் ஆப்ஸ்சை மைக்ரோ சாப்ட் அறிமுகப்படுத்தி உள்ளது. இதி ல் சிறப்பு அம்சம் என்னவென்றால் வாட்ஸ்ஆப்ல ஒரு க்ரூப்ல 256 பேருக்கு மேல சேர்க்க முடியாது. ஆனால் இந்த கைலாசா-வில் எத்தனை பேர் வேண்டுமானாலும் சேத்துக்கலாம். அன்லிமிடெட்
கைசாலா ஆப்ஸ்சில் கொண்டு வரப்பட்டுள்ள சில வசதிகள் வாட்ஸ்ஆப்பிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதிலும் இந்த கைசாலா ஆப்ஸ் மூலம் கருத்து கணிப்பு, ஆய்வுகள், டாக்கு மென்ட்களை உருவாக்க முடியும்னு சொல்றாங்க. இந்த வசதி இருக்கறதால தொழில் நிறுவனங்கள் தங்கள் குரூப்பில் சர்வே நடத்தி, தங்களுக்கு இருக்கும் வரவேற்பை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஆந்திராவில் பெரும்பாலான அரசு துறைகள் இந்த ஆப்சை தற்போது பயன்படுத்தி வருகின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த ஆப்ஸ் மூலம் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மெசேஜ் அனுப்பி, தனது அரசின் செயல்பாடுகள் குறித்த கருத்துக்களை கேட்டு வருகிறாராம்.
அது மட்டுமின்றி கைசாலா (Kaizala) ஆப்ஸ் மூலம் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நபர்களுக்கு மெசேஜ் அனுப்பவும், அவர்களுக்கு வாய்ஸ் கால் செய்து பேசவும் முடியுதாம். .இந்த ஆப்ஸ்ல, வாட்ஸ்ஆப்ல இல்லாத கூடுதல் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், கைசாலா ஆப்ஸ் யூஸ் பண்றவங்க, வணிக வளாகம் உள்ளே நடந்து போகும்போது, தானாகவே அந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் கிடைக்கும் பொருட்கள், அவற்றின் சிறப்பு தள்ளுபடிகள் உள்ளிட்ட விபரங்களை தங்களுடைய மொபைல்களிலேயே பெற முடியுமாம்.
அறிமுகமான சில மாதங்களிலேயே நாடு முழுவதும் இதுவரை 30 க்கும் மேற்பட்ட அரசு துறைகள், அரசு துறைகளைச் சேர்ந்த 70,000 க்கும் மேற்பட்டோர் இந்த கைசாலா ஆப்ஸ் ஐ பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்களாம்..
இந்த கைசாலா ஆப்ஸ் எனும் செயலி ஆன்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருகிறதாம்.
இன்ஸ்ட்டால் பண்ணி யூஸ் பண்ணிப்பாக்கலாமே..


