செயற்கை நுண்ணறிவுப் பெண் வெண்பா தொகுத்து வழங்கிய புதியதலைமுறை தமிழன் விருதுகள்!

செயற்கை நுண்ணறிவுப் பெண் வெண்பா தொகுத்து வழங்கிய  புதியதலைமுறை தமிழன் விருதுகள்!

சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழன் விருதுகள் விழா நடைபெற்றது. புதிய தலைமுறை சார்பில் பத்தாவது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் பிரபல நட்சத்திரங்கள் மற்றும் அறிஞர்கள் கலந்து கொண்டார்கள். இயக்குநர்கள் பாக்யராஜ் மற்றும் ஞானவேல் உள்ளிட்டோருக்கு கலைக்கான பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டன.

ஆரவாரமும், நெகிழ்வான தருணங்களும் நிறைந்திருந்த இவ்விழாவில் விளையாட்டு, கலை, இலக்கியம், தொழில், சமூகப்பணி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் 12 சாதனையாளர்களுக்கு தமிழன் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட வெண்பா என்ற பெண் மற்ற தொகுப்பாளர்களுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தமிழன் விருதுகள் விழாவின் தொகுப்பு, வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும், நமது புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

error: Content is protected !!