புதிய தலைமுறையில் தொலைக்காட்சியில் “கொஞ்சம் தீனி..கொஞ்சம் வரலாறு”.

புதிய தலைமுறையில் தொலைக்காட்சியில்  “கொஞ்சம் தீனி..கொஞ்சம் வரலாறு”.

வ்வொரு ஊருக்கும் ஒரு மணமுண்டு.. அந்தந்த ஊர் மண்ணுக்கும், தண்ணீருக்கும் தனித்துவமுண்டு. அங்கு தயாராகும் அந்த மண்ணுக்கே உரிய பலகாரங்களை தேடி, நாடி, ஓடி வருவோர் பலர். மிக்சர், முறுக்கு, அதிரசம் என தீபாவளிக்கு விதவிதமான பலகாரங்களை தயார் செய்வது பல குடும்பங்களில் வாடிக்கையாக உள்ளது. கண்ணை மூடி யோசியுங்கள்.

தீபாவளி பண்டிகை என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? பட்டாசு, புத்தாடைகளை கடந்து நாவும், வயிறும் நிறையும் பலகாரங்கள் தானே.. பாட்டி செய்து தந்த தேன்குழல், அம்மா செய்து தந்த அதிரசம் என பலகாரங்கள் தரும் நினைவுகள் சுகமானவை. அந்த சுவை அந்த நேரத்திற்கானது மட்டுமல்ல, நினைவுகளின் அடுக்குகளில் பதிந்து, நாவின் சுவை மொட்டுகளை மலரச்செய்து, பால்ய பருவத்துக்கே கொண்டு சென்றுவிடும். எந்த வயதானாலும் தீபாவளி பலகாரங்களின் நினைவுகள் நம் மனதை விட்டு அகலாதவை.. வீட்டு பலகாரங்கள் மட்டுமின்றி சில இடங்களில் இருந்து நாம் வாங்கும் பலகாரங்களுக்கு வரலாறு உண்டு. அந்த வரலாற்றை தீபாவளிப் பண்டிகையையொட்டி சிறப்பு நிகழ்ச்சியாக உங்களுக்கு அளிக்கிறது புதிய தலைமுறை.

“கொஞ்சம் தீனி..கொஞ்சம் வரலாறு” என்ற இந்த சிறப்பு நிகழ்ச்சி புதிய தலைமுறையில் அக்டோபர் 23 ஆம் தேதி முதல் தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மண் மணக்கும் பலகாரங்களை, அவை தயாராகும் இடத்துக்குச் சென்று தயாரிக்கும் விதத்தையும், அந்த பலகாரத்தின் வரலாற்றையும், பின்னணியையும், அந்த சுவைக்கு காரணமான தனித்துவத்தையும் தனது பயணம் மூலம் பதிவு செய்திருக்கிறார் செய்தியாளர் விக்ரம் ரவிசங்கர்.

CLOSE
CLOSE
error: Content is protected !!