பஞ்சாபின் 114 வயது மராத்தான் சாதனை வீரர் ஃபௌஜா சிங் சாலை விபத்தில் மரணம்!
பஞ்சாப்பைச் சேர்ந்த மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங், தனது 114 வயதில் சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரமளிக்கிறது. அவர் உலகிலேயே அதிக வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் என்ற பட்டத்தைப் பெற்றவர்.ரன்னிங் பாபா, சீக்கிய சூப்பர்மேன் என அழைக்கப்படும் ஃபௌஜா சிங், இந்த வயதில் இப்படியும் ஓட முடியுமா? என்று பல்வேறு அதியசங்களை நிகழ்த்திக் காட்டினார். ஓட வேன்டிய 20, 25 வயதில் வீட்டில் முடங்கிக் கிடந்த இளைஞர்களுக்கு இந்த சீக்கிய சூப்பர் மேன் உத்வேகமாக திகழ்ந்தார். மேலும் தனது வயதுடைய முதியவர்களுக்கும் ‘எந்த வயதிலும் சாதிக்கலாம்’ என தெம்பூட்டினார். தன்னுடைய அசாத்திய திறமை காரணமாக அடோபோஸ் நிறுவனத்தின் விளம்பரங்களிலும் நடித்து உலகப்புகழ் பெற்றவரிவர்.

ஃபௌஜா சிங் பற்றி சில முக்கிய தகவல்கள்:
- பிறப்பு: ஏப்ரல் 1, 1911 அன்று பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பியாஸ் பிண்ட் கிராமத்தில் பிறந்தார்.
- மராத்தான் வாழ்க்கை: இவர் 89 வயதில்தான் மராத்தான் ஓடத் தொடங்கினார். 2000 ஆம் ஆண்டில் லண்டன் மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்று உலக அளவில் பிரபலமானார்.
- சாதனைகள்:
- 2000 லண்டன் மராத்தான்: 6 மணி 54 நிமிடங்கள்
- 2001 லண்டன் மராத்தான்: 6 மணி 54 நிமிடங்கள்
- 2002 லண்டன் மராத்தான்: 6 மணி 45 நிமிடங்கள்
- 2003 லண்டன் மராத்தான்: 6 மணி 2 நிமிடங்கள்
- 2003 டொராண்டோ வாட்டர்ஃபிரண்ட் மராத்தான்: 5 மணி 40 நிமிடம் (தனிப்பட்ட சிறந்த)
- 20003 நியூயார்க் நகர மராத்தான்: 7 மணி 35 நிமிடங்கள்
- 2004 லண்டன் மராத்தான்: 6 மணி 7 நிமிடங்கள்
- 2004 கிளாஸ்கோ நகர அரை மராத்தான்: 2 மணி 33 நிமிடங்கள்
- 2004 டொராண்டோ வாட்டர்ஃபிரண்ட் அரை மராத்தான்: 2 மணி 29 நிமிடம் 59 வினாடிகள்
- 2011 டொராண்டோ வாட்டர்ஃபிரண்ட் மராத்தான்: 8 மணி 11 நிமிடங்கள்
- 2012 லண்டன் மராத்தான்: 7 மணி 49 நிமிடம் 21 வினாடிகள்
- 2012 ஹாங்காங் மராத்தான் (10 கி.மீ): 1 மணி 34 நிமிடம்
- 2013 ஹாங்காங் மராத்தான் (10 கி.மீ): 1 மணி 32 நிமிடம் 28 வினாடிகள்

- “டர்பன்ட் டொர்னாடோ” (Turbaned Tornado): தலைப்பாகை அணிந்து ஓடியதால், “டர்பன்ட் டொர்னாடோ” மற்றும் “சீக்கிய சூப்பர்மேன்” என்று அழைக்கப்பட்டார்.
- ஊக்கமளிக்கும் ஆளுமை: அவர் தனது வயதைத் தாண்டி ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்றது, உலகெங்கிலும் உள்ள பல இளைஞர்களுக்கும் முதியோர்களுக்கும் உத்வேகமாக அமைந்தது. உடல்நலம் மற்றும் மன உறுதியின் அடையாளமாகத் திகழ்ந்தார்.விளம்பரங்களில்: அடிடாஸ் நிறுவனத்தின் “இம்பாசிபிள் இஸ் நத்திங்” (Impossible is Nothing) பிரச்சாரத்திலும் முகமத் அலி, டேவிட் பெக்காம் போன்ற பிரபலங்களுடன் தோன்றினார்.
- மறைவு: ஜூலை 14, 2025 அன்று, தனது சொந்த கிராமத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஃபௌஜா சிங், தனது வாழ்க்கை மூலம் வயது என்பது வெறும் எண் என்பதை நிரூபித்தார். அவரது மறைவு உலக ஓட்டப்பந்தய சமூகம் மற்றும் அவரைப் பின்தொடர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஒரு பெரிய இழப்பாகும். அவரது துணிச்சல், விடாமுயற்சி மற்றும் மன உறுதி என்றென்றும் பலருக்கு உத்வேகமாக இருக்கும்.
ஈஸ்வர் பிரசாத்



