வெளிநாடுகளுக்கு கோதுமை & வெங்காய விதைகள் ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு உத்தரவு

வெளிநாடுகளுக்கு கோதுமை  &  வெங்காய விதைகள் ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு உத்தரவு

லகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. முதலிடத்தில் உக்ரைன் உள்ளது. போர் காரணமாக இங்கிருந்து கோதுமை ஏற்றுமதி முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 14 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கோதுமை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருவதால் பதுக்கல் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் நேற்று மாலை இது தொடர்பாக ஒரு அறிக்கை வௌியிட்டது. அதில், கோதுமை ஏற்றுமதிக்கு உடனடி தடை அமலாகிறது. இருப்பினும், மே 13–ம் தேதிக்கு முன்னதாக கோதுமை ஏற்றுமதி ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், அவற்றின்படி மட்டும் ஏற்றுமதிகள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது அண்டை நாடுகள் ஏதேனும் கோதுமை கோரியிருந்தால், மத்திய அரசு அனுமதியுடன் எந்த நாடு கோரியுள்ளதோ அதற்கு அனுமதிக்கப்பட்ட அளவில் கோதுமை ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில் சர்வதேச அளவில் கோதுமை சந்தையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன்–ரஷ்யா மோதலால் ஆங்காங்கே போதிய அளவில் கோதுமை வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகள் பலவும் கோதுமை சீராகக் கிடைக்காமல் சிக்கலில் உள்ளன. இந்நிலையில் உள்நாட்டில் உணவுப் பாதுகாப்பு, தேவையை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் கோதுமையின் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல் வெங்காய விதைகள் ஏற்றுமதிக்கும் உடனடியாக தடை கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேவேளையில் 2022-23 காலக்கட்டத்தில் கோதுமை ஏற்றுமதி தொடர்பாக மொராக்கோ, டுனீசியா, இந்தோனேசியா உள்ளிட்ட 8 நாடுகளுடன் ஆலோசனை நடத்த பிரதிநிதிகளை அரசு அனுப்பிவைத்துள்ளது. 2022-23 ஆண்டில் 10 மெட்ரிக் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2021-22ல் இந்தியா 7 மெட்ரிக் டன் கோதுமை ஏற்றுமதி செய்தது அதில் 50% வங்கதேசத்துக்கு மட்டுமே ஏற்றுமதியானது.

இந்திய கோதுமைக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!