பிடிஐ நியூஸ் ஏஜென்சிக்கு பிரசார் பாரதி எச்சரிக்கை!
நம் நாட்டின் மிக முக்கியமான செய்தி ஏஜென்சியான பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (PTI) செய்தி யாளர்கள் வழங்கும் செய்தி தேச நலனுக்கு எதிராக இருப்பதாக ஆல் இந்திய ரேடியோ மற்றும் தூரதர்ஷன் ஆகிய அமைப்புகளை நடத்தும் பிரசார் பாரதி என்ற நிறுவனம் குற்றம்சாட்டியது, அதனால் பிடிஐ நிறுவனத்துக்கு செலுத்தும் சந்தாவை நிறுத்தப் போவதாகவும் பிரச்சார் பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரசார் பாரதி அமைப்பு அரசின் ஊடகங்களான தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்திய ரேடியோ ஆகிய தகவல் தொடர்பு அமைப்புகளை நடத்தி வருகிறது. அந்த அமைப்பின் சார்பில் கிரீட்டிங் செய்தி நிறுவனத்தின் நிர்வாக போடி தலைவரான விஜய் குமார் சோப்ராவுக்கு மிகவும் சூடான கடிதம் ஒன்று அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. (PTI) பிடிஐயை செய்தியாளர்கள் வழங்கும் செய்திகள் தேச நலனுக்கு எதிராக இருப்பதாகவும், இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராக இருப்பதாகவும் பிரசார் பாரதி சார்பில் பிடியை நிறுவனத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று புதுடெல்லியில் உள்ள சீன தூதர் சன் வெய்துங்கை பேட்டி கண்டு செய்தி ஒன்றை நீட்டி நிறுவனம் வெளியிட்டது, அந்த செய்தியில் இந்திய – சீன எல்லையில் அமைதியை பராமரிக்கும் பொறுப்பு இந்தியாவின் வசம்தான் உள்ளது. சீனாவிற்கு அந்த பொறுப்பு இல்லை.
இந்திய – சீன எல்லையில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை கடந்து இந்திய ராணுவம் தான் சீன ராணுவ வீரர்களை தாக்கியது. இந்திய-சீன ஒப்பந்தங்களை மீறியது இந்திய ராணுவம் தான் என்று சீன தூதர் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டது.
நம் நாட்டில் உள்ள மிகப் பெரிய செய்தி நிறுவனம் பிடிஐதான் லாப அடிப்படையில் இயங்காமல் செயல்படும் கூட்டுறவு நிறுவனமாக அது உள்ளது. இந்தியாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட பத்திரிகைகளுக்கு பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வழங்குகிறது பிரசார் பாரதியின் குற்றச்சாட்டை தொடர்ந்து சனிக்கிழமை பிடிஐ ஏஜென்சியின் போர்டு கூட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிடிஐ நிறுவனத்தில் மிகப்பெரிய சந்தாதாரர் பிரசார் பாரதி என்பது குறிப்பிடத்தகுந்தது