போர் தொழில் விமர்சனம்!

போர் தொழில் விமர்சனம்!

ரு குடும்பப் படம் எடுக்க எந்த மெனக்கெடலும் எடுக்க வேண்டாம்.. அது போல் காமெடி படமெடுக்க சிரிப்புகள் சீன்களை கோர்வையாக்க தெரிந்திருந்த வேண்டும்.. ஆக்‌ஷன் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் பொருத்தமாக அமைய வேண்டும்.. ஆனால் திரில்லர் அல்லது கிரைம் டைப்பில்லான கதைகளுக்கு மட்டும் மிகவும் கஷ்டப்பட வேண்டும்.. சீன் பை சீன்களின் மூலம் ரசிகரை சீட் நுனியில் அமர வைக்கும் வித்தை தெரிந்திருக்க வேண்டும்.. அப்படி ஒரு மேஜிக்கை உருவாக்கிய படமே ‘போர் தொழில்’!

கதை என்னவென்றால் போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்து வேலையில் சேர வருகிறார் பிரகாஷ் ( அசோக் செல்வன்). அவரை கண்டிப்புக்கு பேர் போன அதிகாரி என்று பெயரெடுத்த லோகநாதன் (சரத் குமார்) என்பவரிடம் பயிற்சி எடுக்கவும், அவர் கையில் ஒப்படைக்கப்பட்ட மர்ம கொலை சம்பவ விசாரணையில் உதவியாக இருக்கவும் அசோக் செல்வன் அனுப்பப்படுகிறார். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே பிரகாஷிடம் கடுப்படிக்கிறார் லோகநாதன். ஒரு கட்டத்தில் இந்த வேலையே வேண்டாம் என்று எண்ணுகிறார் பிரகாஷ். அவருக்கு வீனா ( நிகிலா விமல்) தைரியம் சொல்ல பணியை தொடர செய்கிறார். இச்சூழலில் தொடர் கொலை செய்யும் கொலைகாரன் ஒருவனை போலீஸ் கண்டுபிடிக்க அந்த கொலை காரன் தற்கொலை செய்து கொண்டு சாகிறான். ஆனாலும் கொலை சம்பவங்கள் தொடர்கிறது. இதனால் அதிர்ச்சி அடையும் அசோக்.சரத் நிஜ கொலையாளியை கண்டு பிடிக்க புதிய முயற்சி எடுத்து சாதிப்பதே போர் தொழில்

நாயகன் அசோக் செல்வன் கிடைத்த ரோலின் வெயிட்டைப் பிரிந்து அபாரமாய் நடித்து சபாஷ் சொல்ல வைக்கிறார்.. புதிதாக பணியில் சேரும் காவலருக்கு உரிய துடுக்குத் தனத்தையும், ஹீரோ என்ற பந்தா இல்லாமல் தன் ஆர்வ மிகுதியையும் கேஷூவலாக எக்ஸ்போஸ் செய்து கவர்கிறார்..
சீனியர் ஆர்டிஸ்டான சரத் கரடுமுரடான ரோலில் அசோக் செல்வனை வெறுப்பேற்றுவது, கறாராக கற்றுக் கொடுக்கும் பாணி, துப்பறிவதில் காட்டும் சாதுரியம் என கேரக்டரை புரிந்து நடித்து பிரமிக்க வைக்கிறார்.நிகிலா விமல் நாயகியாம்ஆனால் லவ் எல்லாம் செய்யாமல் தன் பங்களிப்பைச் செவ்வனே செய்திருக்கிறார். ஜீப் டிரைவராக நடித்துள்ள தயாரிப்பாளர் தேனப்பன் சில காட்சிகளே வந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார். இவர்கள் தவிர மறைந்த நடிகர் சரத்பாபுவும் கதையின் ஓட்டத்தில் கவனம் பெறுகிறார்.

கலைச்செல்வன் சிவாஜியின் கேமராவில் இரவுக்காட்சிகளில் எல்லாம் தெளிவாக இருப்பதும், ஏனையக் காட்சிகளையும் நிறைவாகக் காட்டி அசத்தி இருக்கிரார். ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படம் பரபரப்பாக ஓட உதவி உள்ளது.. கூடவே பார்வையாளர்களை கொஞ்சம் படபடப்பாக வைத்திருக்கவும் பயன்பட்டிருக்கிறது. ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு, திரைக்கதையின் தன்மையை உணர்ந்திருக்கிறது

இந்த க்ரைம் திரில்லர் கதைகளுக்கு மட்டும் மொழிகளைத் தாண்டிய ரசிகர் கூட்டம் உண்டு. அவர்களைக் கவரும் விதத்திலேயே, படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை சில இடங்களைத் தவிர படம் முடியும் வரை பரபர திரைக்கதையுடன் இந்தப் படத்தை நகர்த்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா. அதேபோல, நாவல்களில் நாம் இதுநாள் வரை பாக்கெட் நாவல்கள் மூலம் ரசித்த ‘விவேக்-விஷ்ணு’, ‘வசந்த்- கணேஷ்’ கேரக்டர்களுக்கு இணையாக சரத்குமார்- அசோக்செல்வன் ஜோடியை ரசிக்க வைத்து விட்டார்.

மொத்தத்தில் இந்த போர் தொழில் – பக்கா ஃபுல் மீல்ஸ்

மார்க் 4/5

error: Content is protected !!