June 7, 2023

தப்பு நடந்தா வீடியோ எடுத்து தட்டிக் கேட்கும் இளைஞர்கள் – ’மான் கீ பாத்’தில் மோடி பெருமிதம்!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ”மான் கீ பாத்” (மனதின் குரல்) என்ற பெயரில் ரேடியோவில் உரையாற்றி வருகிறார். அவரது 60-வது நிகழ்ச்சி இன்று வெளியானது.

அதில் பிரதமர் மோடி பேசியதன் சாராம்சம்-

நவீன இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர் களே இந்த இந்தியாவின் பலமாக உள்ளனர்.இளைஞர்கள் இந்த நாட்டின் அரசியல் அமைப்பை மதிப்பவர்களாக உள்ளனர். அடுத்த, 10 ஆண்டுகள் இளைஞர்களுக்கானது. வரும் காலங்களில் நவீன இந்தியாவை கட்டமைப்பதில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். ‘சக்தியும், ஆற்றலும் நிறைந்த இளைஞர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவர்’ என சுவாமி விவேகானந்தர் கூறியதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

இன்றைய இளைஞர்கள், தற்போதுள்ள அமைப்பு முறையை விரும்புகின்றனர். ஆனால்,அராஜக போக்கு எந்த வடிவில் வந்தாலும் அதை வெறுக்கின்றனர். நிலையற்ற நிர்வாகத்தை விரும்புவது இல்லை. குடும்பம், ஜாதி, பாலின அடிப்படையில் சலுகை காட்டுவதையும், பாகுபாடு காட்டுவதை யும், இளைஞர்கள் அறவே விரும்புவது இல்லை. குழப்பமான சூழல் எங்கு நிலவினாலும், இளைஞர்கள் அதை, ‘வீடியோ’ எடுத்து தவறு செய்தவர்களை தாங்கள் செய்தது தவறு என உணர வைக்கின்றனர். அரசியலில் ஒரு சார்பு என்பதை அவர்கள் ஏற்பதில்லை. இந்த நாட்டை இளைஞர் கள் முன்னெடுத்து செல்கின்றனர். வரும் அத்தியாயம் அவர்கள் கையில் தான் உள்ளது.

.சமீபத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டதை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்துள்ளனர். இதுகுறித்து நான் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினேன். சூரியனின் இயக்கத்தின் அடிப்படையில் ஜனவரி நடுப்பகுதியில் இந்தியா முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா என்ற செயற்கை கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை அனைவரும் வாங்க வேண்டும். இந்த விஷயத்தில் அனைவரையும் ஊக்கப்படுத்த வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், நம் நாட்டின் குடிமக்களின் கைகளால் தயாரானவை. இந்த பொருட்களை வாங்க வேண்டும் என நீண்ட நாட் களுக்கு வலியுறுத்தப் போவது இல்லை. வரும் 2022ல், நாம், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடு கிறோம். அதுவரையாவது, உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும். இளைஞர்கள் ஒருங்கிணைந்து, தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலம், உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும் என மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ‘உள்நாட்டு பொருட்களை வாங்குவதன் மூலம், அவற்றை தயாரித்த, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றச் செய்ய முடியும்’ என மகாத்மா காந்தி கூறியதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

கடந்த 6 மாதத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத் தொடர் வெற்றிகரமாக நடந்துள்ளது. ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட எம்.பி.க்களுக்கு வாழ்த்துகள்.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த விவேகானந்தர் பாறை 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.இந்த ஆண்டு முடிய இன்னும் 3 தினங்களே உள்ளது. அடுத்த ஆண்டு 21-ம் நூற்றாண்டின் 3-வது 10 ஆண்டாகும். வர இருக்கும் புத்தாண்டுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்”.இவ்வாறு மோடி பேசினார்.