டிமாண்ட்-டுன்னு சொல்லும் AI, ML தயவு செய்து எடுக்காதீங்க!.
இன்று நாம் பேசப்போறது, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தியைப் பற்றி – “NEET-ஐ விட AI படிப்புக்கு தமிழ்நாட்டுல பயங்கர டிமாண்ட், ஐந்து வருஷ உச்சத்துல இருக்கு!” இதைப் பார்த்தவுடனே எனக்கு ஒரே சிரிப்பு. ஏன்னா, AI (Artificial Intelligence) மற்றும் ML (Machine Learning) specialization UG ல படிக்கிறது எவ்வளவு சிக்கல்னு கத்து கத்து என்று பல்வேறு கல்வியாளர்களும் நானும் சொல்றோம்.
இப்போ எல்லாருக்கும் ஒரே ஆசை – “நான் AI படிக்கணும், ML படிக்கணும், டெக் ஜெயிண்ட் ஆகணும்!” அட, நல்ல விஷயம்தான். ஆனா இதுல இருக்கிற சிக்கலை யாரும் யோசிக்கிறதே இல்லை. NEET-க்கு படிக்கிற மாதிரி, ஒரு புத்தகத்தை மனப்பாடம் பண்ணி எழுதினால் போதுமா? இல்லை மக்களே, இது வேற லெவல். AI, ML படிக்கிறது ஒரு மலை மாதிரி – கணிதம் தெரியாமல் மேல ஏற ஏற, கால் வழுக்கி கீழ விழ வாய்ப்பு அதிகம்!
AI, ML படிக்கிறவங்க முதல்ல சந்திக்கிற பிரச்சனை – மேத்ஸ்! கால்குலஸ், லீனியர் ஆல்ஜிப்ரா, ப்ராபபிலிட்டி, ஸ்டாட்டிஸ்டிக்ஸ்… இப்படி ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு. இதைப் பார்த்தாலே பலருக்கு பீதி. நம்ம ஊரில் தான் கணித பாடத்தில் பல முறை கோட் அடித்தாலும் சாப்ட்வேர் என்ஜினீயரிங் படிக்கலாம்.
ஒரு எக்ஸாம்பிள் சொல்லட்டுமா? நீங்க ஒரு சிம்பிள் மாடல் டெவலப் பண்ணணும்னு வச்சுக்கோங்க. அதுக்கு ஒரு ஈக்வேஷன் எழுதணும். அந்த ஈக்வேஷன் ஒரு பக்கம் முழுக்க இருக்கும். அதை சால்வ் பண்ணி, ஒரு மாடலை ட்ரெயின் பண்ணி, அதுக்கு டேட்டா ஃபீட் பண்ணி, எரர் இருந்தா ட்யூன் பண்ணணும்.
அடுத்த சிக்கல் – டேட்டா. AI, ML மாடலுக்கு டேட்டா தான் ராஜா. ஆனா அந்த டேட்டாவை சுத்தம் பண்ணி, ஒழுங்கு பண்ணி, மாடலுக்கு ஃபீட் பண்ணுறது ஒரு பெரிய டாஸ்க். ஒரு டேட்டா செட் எடுத்தா, அதுல 50% மிஸ்ஸிங் வேல்யூ, 30% டூப்ளிகேட், மீதி 20% தப்பான ஃபார்மேட். இதை சரி பண்ணுறதுக்குள்ள உங்க பொறுமை டெஸ்ட் ஆகிடும்.
கடைசியா ஒரு சின்ன அட்வைஸ்
கணிதத்தில் நல்ல ஈடுபாடு,அறிவு இல்லை என்றால் தயவு செய்து AI, ML எடுக்காதீர்கள். ஏன்னா இங்கே எல்லாமே கணிதம் தான்..அதன் applications தான்


