’பல்லு படாம பாத்துக்க’ = விமர்சனம்!

’பல்லு படாம பாத்துக்க’ = விமர்சனம்!

ட்டகத்தி’ தினேஷ், சஞ்சிதா செஷ்டி, ஜகன், ஷாரா, அப்துல் ஆகியோ வெவ்வேறு காரணங்களுக்காக வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கேரளாவில் உள்ள அமானுஷ்ய வனப்பகுதிக்கு வருகின்றனர். ஆனால் அங்கு சாவை விட மோசமான ஒன்று அவர்களை துறத்துக்கிறது. ஜாம்பிகள். ஜாம்பி கடித்தால் சாகாமல் அவர்களும் ஜாம்பி ஆகிவிடுவார்கள். அதைத்தான் படத்தின் டைட்டிலாக வைத்துள்ளார் இயக்குநர். இந்த படம் த்ரில்லர் படம் பாணியில் இல்லாமல், ‘ஷான் ஆஃப் தி டெட்’, ‘வீ ஆர் தி மில்லர்ஸ்’ பாணி முழுக்க முழுக்க இளைஞர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்ட 18+ காமெடி படம். படத்தின் நீளம் 2 மணி நேரம் இருப்பதும் படத்திற்கு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது.

அட்ட கத்தி தினேஷ், ஷாரா, லிங்கா, சாய் தீனா, ஜெகன், அப்துல், விஜய் வரதராஜ், ஆனந்த் பாபு, ஹரிஷ் பெராடி என மிகப்பெரிய ஆண் நட்சத்திரங்கள் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும் சில நடிகர்கள் கொஞ்சம் மேஜர் சுந்தரராஜன் லெவலில் நடிக்க முயன்று கடுப்பேற்றி உள்ளார்கள்.. மெயில் ரோலில் வரும் அட்ட கத்தி தினேஷ் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தன்னாலும் காமெடி பண்ண முடியும் என்று நிரூபிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரது காமெடியை விட அப்துலின் காமெடி தான் நம்மை சிரிக்க வைக்கிறது

பல்வேறு திரைப்படங்கள், விளம்பரங்கள், டிஸ்கவரி சேனல் என பாகுபாடின்றி எல்லா ஃபர்னிச்சர்களும் பதம் பார்க்கப்பட்டன. அரசியல் சார்ந்த நையாண்டிகளை எப்படி சென்சாரை தாண்டி இயக்குநர் கடத்தி வந்தார் என்பது மர்மமாகவே உள்ளது. அதே நேரத்தில், சென்சார் சர்டிபிகேட் வாங்க படக்குழு டெல்லி வரை சென்று போராடியதும் தெரிந்த விஷயமதாம்.. 5 ஆண்டுகள் முன் எடுக்கப்பட்ட படம் என்பது ஆங்காங்கே நமக்கு அப்பட்டமாக தெரிவது தவிர்க்க முடியவில்லை என்றாலும் அனைத்து ரெபெரென்ஸ்களுமே இன்று பார்க்கும் போதும் வொர்க்கவுட் ஆகியிருக்கிறது.

அதிரடியாக எண்ட்ரி கொடுக்கும் சஞ்சிதா ஷெட்டி, துப்பாக்கியோடு அதிரடி காட்டுவதிலும், பாடல் காட்சியில் கவர்ச்சி காட்டுவதிலும் ரசிகர்களை திருப்திபடுத்துகிறார். சஞ்சிதா ஷெட்டியின் கவர்ச்சியை காட்டிலும், மற்ற நட்சத்திரங்கள் பேசும் இரட்டை அர்த்த வசனங்கள் தான் திரையரங்கையே அதிர வைக்கிறது. சில இடங்களில் இரட்டை அர்த்தம் இல்லை, நேரடியாகவே சொல்கிறோம், என்ற பாணியில் அதிர்ச்சியளிக்கவும் செய்கிறார்கள்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், பாலமுரளி பாலுவின் இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்தாலும், படத்தில் இடம்பெறும் வசனங்கள் தான் ரசிகர்களிடம் அழுத்தமாக பதிகிறது.

கதை எழுதி இயக்கியிருக்கும் விஜய் வரதராஜ், ‘பல்லு படாம பாத்துக்க’ என்ற வார்த்தைக்கு பொருத்தமாக ஏதோ ஒரு கதையை உருவாக்கி கவர்ச்சி கலந்த காமெடி படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், படத்தில் இடம்பெறும் பெரும்பாலான வசனங்களில் கவர்ச்சியை தாண்டிய கவுச்சி வாடை அடிக்கிறது.

இளசுகள் குடும்பத்துக்கு தெரியாமல் போய் பார்க்கலாம்

மார்க் 2.5/5

error: Content is protected !!