இமாச்சல பிரதேசத்தில் மலைச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த பேருந்து!- வீடியோ!

இமாச்சல பிரதேசத்தில் மலைச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த பேருந்து!- வீடியோ!

மாச்சலப் பிரதேசம் கினாவூர் மாவட்டம் தேசிய பெருவழியில் சென்று கொண்டிருந்த மாநில அரசு சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று நிகுல்சேரி என்ற இடத்தில் மலைச் சரிவில் சிக்கி மண்ணில் முழுக்க புதைந்தது ராணுவமும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் மீட்பு பணிகளை துவக்கி உள்ளனர்.

இமாசலப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று தேசிய பெருவழியில்ரேகோங்பியோ என்ற இடத்துக்கும் ராம்பூருக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது பகல் 12 முப்பது மணி அளவில் நிகுல்சேரி என்ற இடத்தில் பேருந்து செல்லும் பொழுது மலைச்சரிவு திடீரென்று ஏற்பட்டது. மலையில் இருந்து சரிந்து விழுந்த கற்கள், மண்ணில் மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்து முழுக்க புதைந்து விட்டது. மண் விழுந்த இடத்தில் சிக்கிய வேறு 2 வாகனங்களும் முழுக்க மண்ணில் புதைந்தன.

உடனடியாக ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைக்கு தகவல் அனுப்பப்பட்டது அவர்கள் விரைந்து வந்து உடனடியாக மீட்புப் பணிகளை துவக்கி உள்ளனர். மாநில சாலை போக்குவரத்து கழக பேருந்து டிரைவர் மண்ணில் இருந்து நீக்கப்பட்டார். அவர் பேருந்தில் மொத்தம் 32 பயணிகள் இருந்தனர் என்று கூறினார். விபத்தில் சிக்கியவர்கள் முழு விபரமும் கிடைக்கவில்லை விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விபரமும் இன்னும் கிடைக்கவில்லை.

பேருந்துடன் சிக்கிய 2 தனியார் வாகனங்களில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. மீட்புப்பணிகள் பூர்த்தியானதும் ஒட்டுமொத்தமாக விபத்தினால் பாதிக்கப் பட்டவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் தெரியவரும்.

error: Content is protected !!