பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (செப்.13) முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (செப்.13) முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

ருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 14-ல் (ஞாயிறு) போகி பண்டிகை, ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தொடர்ச்சியாக 5 நாட்கள் அரசு விடுமுறையாக வருகிறது. எனவே, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக விரைவு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை (செப்.13) முதல் தொடங்குகிறது.

அதன்படி, ஜனவரி 11 ஆம் தேதி (வியாழக்கிழமை) ரயிலில் பயணம் செய்ய நாளையும், ஜனவரி 12 ஆம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) நாளை மறுதினம் செப்டம்பர் 14 ஆம் தேதியிலும், ஜனவரி 13 ஆம் தேதி (சனிக்கிழமை) பயணிக்க செப்டம்பர் 15 ஆம் தேதியிலும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.

பொங்கலுக்கு முந்தைய நாள், அதாவது ஜனவரி 14 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரயிலில் பயணிக்க செப்டம்பர் 16 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. எனவே, பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை மாலையில் ஜனவரி 12 ஆம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கும். இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுண்டர்களிலோ முன்பதிவு செய்யலாம் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. விரைவு ரயில்களில் பயணிக்க 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. அந்த வகையில், அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு நாளை முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!