திமுக என்பது செல்லாத நோட்டு – ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை!
தான் போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதியில் இரண்டாவது நாளான 22-03-2021 eறு தேர்தல் பிரச்சாரத்தில் அஇஅதிமுக அரசின் சாதனைகளை விவரித்த ஓ.பன்னீர்செல்வம் தனது தொகுதியின் வளர்ச்சியைக் குறித்தும் கல்வி வளத்தைக் குறித்தும் விவரித்துக் பரப்புரையாற்றினார்.
அஇஅதிமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லிருக்கின்ற விலையில்லாத வாஷிங் மிஷின் மற்றும் வருடத்திற்கு 6 சிலிண்டர் அனைத்துக் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் நிச்சயமாக வழங்கப்படும் எனவும் இன்னும் கூடுதலான திட்டங்களும் கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.
தற்போது பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.25000 திருமண உதவுத்தொகையை ரூ.35000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை கூறி தனது தொகுதி மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
மேலும், திமுக வாக்குறுதிகளை கொடுப்பார்கள் ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள் என்று கூறிய ஓ..பன்னீர்செல்வம் திமுக ஒரு செல்லாத நோட்டு அது கள்ள நோட்டு என விமர்சித்ததோடு திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றுவார்கள் யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கும் விதமாகவும் தனது தேர்தல் பரப்புரையில் பேசினார்.
தேர்தல் பரப்புரையின் போது பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அதனை தனது தலையாய கடமையாக ஆற்றுவேன் எனவும் தொகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்த்தார். பூதிப்புரம் பேரூராட்சியில் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட அனைத்து கட்டிடப்பணிகளை பட்டியலிட்டதோடு அந்தப் பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் மக்களுக்கு உபயோகமான எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்று திமுகவினரை பற்றி விமர்சித்து பொது மக்களுடன் இணைந்து நகைச்சுவையாக உரையாற்றி சென்றார்.