அப்போலோவில் ஜெ வுக்கு சேவை செய்த டாக்டர்கள், நர்ஸூகளின் நினைவலைகள்!
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ம் திகதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவர் உடல்நலன் தேறி சிறப்பு பிரிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அதாவது நவம்பர் 19ம் திகதி சி.வி.ஷீலா, எம்.வி.ரேணுகா, சாமுண்டீஸ்வரி உள்பட 16 செவிலியர்கள் உறுதுணையாக இருந்தனர். தற்போது ஜெயலலிதா மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களும், நர்ஸூகளும் அவருடனான தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

8 மணி நேரம் என்ற கணக்கில் 3 ஷிப்ட்களில் 16 செவிலியர்கள் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்துள்ளனர். அவர்களில் மூவர் ஜெயலலிதாவின் அபிமானத்தைப் பெற்றிருக்கிறார்கள். சி.வி.ஷீலா, எம்.வி.ரேணுகா, சாமுண்டேஸ்வரி ஆகிய மூன்று செவிலியர்களையும் ஜெயலலிதா செல்லமாக ‘கிங்காங்’ என்று அழைத்துள்ளார்.
நர்ஸ் ஷீலா கூறும்போது, “ஜெயலலிதாவுக்கு மருத்துவ பணிவிடைகள் செய்ததை பெரும் பாக்கியமாக உணர்கிறேன். அவர் எங்கள் மீது பூரண நம்பிக்கை வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் நாங்கள் வரும்போது புன்முறுவலோடு எங்களை வரவேற்பார். ‘நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். நான் ஒத்துழைக்கிறேன்” என்பார். சோர்வாக உணர்ந்தபோதுகூட பயிற்சிகளை செய்யமாட்டேன் என கூற மாட்டார் ‘இதை நான் பின்னர் செய்யலாமா’ என்றுதான் கேட்பார்.
பிசியோதெரபி சிகிச்சைகள் ஆரம்பித்தபோது பந்துகளை எங்கள் மீது தூக்கிவீசி விளையாடுவார். திட உணவு கொடுக்க ஆரம்பித்தபோது மிகுந்த சிரமத்துக்கு இடையேயும் அதை சாப்பிடுவார். 4 கரண்டி மட்டுமே சாப்பிட்டார். ஒவ்வொரு கரண்டி உணவையும் இது ஷீலா சிஸ்டருக்காக என்ற வரிசையில் ஒவ்வொரு செவிலியர் பெயரையும் கூறி சாப்பிடுவார். இந்தி, ஆங்கிலப் பாடல்களைக் கேட்டு ரசிப்பார்” என்றார்.
நர்ஸ் ரேணுகா கூறும்போது, “அந்த 70 நாட்களில் நடந்த எதையுமே என்னால் மறக்க இயலாது. அவரால் எழுத முடிந்தபோது அவருக்குத் தேவையான உணவு வகைகளை அவரே பட்டியலிட்டார். பொங்கல், உப்புமா, தயிர் சாதம், உருளைக்கிழங்கு அவருடைய விருப்பமான உணவாக இருந்தது. அவருக்கு சமையல் செய்வதற்காகவே தனி சமையலறையும் இருந்தது. அவருடைய தனிப்பட்ட சமையல்காரர் வரவழைக்கப்பட்டு சமையல் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார். சில நேரங்களில் உணவின் சுவை குறித்து கிண்டலாகப் பேசுவார். நாங்கள் அனைவரும் கோட நாடு வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். அங்குவந்தால் சுவையான தேநீர் தருவதாகக் கூறினார். தான் பணிக்குத் திரும்பியதும் எல்லோரும் சட்டசபைக்கு வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்” என்று தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
ஜெயலலிதாவின் அன்பான பேச்சு டாக்டர்களையும் கவர்ந்திருந்தது. குறிப்பாக பெண் டாக்டர்கள். சத்யபாமா, “என்னுடைய சிகை அலங்காரத்தை மாற்றினால் நான் இன்னும் மிடுக்காகத் தெரிவேன் என ஒருநாள் கூறினார். அதுமட்டுமல்லாமல், ‘நான் முதல்வராக இந்த உத்தரவைப் பிறப்பிக்கிறேன்’ என்றார்” எனக் கூறினார். அத்துடன் .சில நேரங்களில் சருமத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என பெண் மருத்துவர்களுக்கு டிப்ஸ் அளிப்பார்..எவ்வளவு பிசியான வேலை இருந்தாலும்,பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கருத்து.” என்று தெரிவித்தார்
இதேபோல் மற்ற பெண் டாக்டர்களிடம் அவர்களது குடும்பம் குறித்து விசாரித்திருக்கிறார். காலையில் சீக்கிரமாக பணிக்கு வருவது கடினமாக இல்லையா? ஏன் இன்னும் வீட்டுக்கு கிளம்பவில்லை போன்ற கேள்விகளை எல்லாம் கேட்டுள்ளார். உடல்நலத்தைப் பேணுங்கள் என்றும் சரும பாதுகாப்பு குறித்தும் அடிக்கடி பேசுவாராம்.
எத்தகைய சூழலில் அவர் இருந்தாலும் அவருக்கு சிகிச்சை அளிக்கவரும் டாக்டர்கள் அவர் முன் நின்றுகொண்டு விசாரிக்காமல் அமர்ந்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கி ர். ஆனால், அறைக்கு வரும் முன் கதவைத் தட்டிவிட்டு அனுமதி கேட்டு வர வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.
அவருக்கு அப்போலோ மருத்துவமனையின் காபி பிடிக்காது.ஒரு முறை தனது அறை முழுவதும் டாக்டர்களும், நர்ஸூகளும் இருக்கும் போது,எல்லாரையும் தனது போயஸ் கார்டன் வீட்டிற்கு அழைத்துள்ளார்.”வாங்க எல்லாரும் நம்ம போயஸ் கார்டன் வீட்டுக்கு போகலாம்.உங்களுக்கு ஸ்பெஷல் கொட நாடு டீ தரச் சொல்கிறேன்.”என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
லண்டன் மருத்துவர் மைக்கில் பீலே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் போது,”நான் தான் இப்போதைக்கு உங்கள் பாஸ்.நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்.”என விளையாட்டாக தெரிவித்துள்ளார்.அதற்கு,”இந்த மாநிலத்திற்கே நான் தான் தலைவி.”என அவருக்கு கம்பீரத்துடன் பதில் அளித்துள்ளார் ஜெயலலிதா.
திருப்பரங்குன்றம்,அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றியடைந்த செய்தியை ஜெயா டிவியில் பார்த்ததும்,புன்னகைத்துள்ளார்.ஆனால் இந்த சூழ்நிலை முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென மாறிப் போயுள்ளது.அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் றைக்குள் நுழைந்தபோது,அவர் சிரிக்கவும் இல்லை,பேசவும் இல்லை.அவருடைய வெண்டிலேட்டர் கருவியை சரிசெய்து பார்த்த மருத்துவர்,அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்துள்ளார்.அதன் பிறகு கடந்த திங்களன்று அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.


