படிப்பே முக்கியம் ; நடிப்பில் ஆர்மில்லை! – சத்யராஜ் மகள் விளக்கம்!
இது குறித்து திவ்யா சத்யராஜ் வெளியிட்ட செய்தியில், ”நான் ஏழு ஆண்டுகளாக ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறேன். சென்னையில் உள்ள இரு கிளினிக்குகளில் பணியாற்றி வருவதோடு, ஊட்டச்சத்து குறித்த பி.எச்.டி படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இந்நிலை யில், நான் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறி சில செய்திகள் சமூக வலைதளங்களில் வந்துள்ளன. இதில் துளியும் உண்மையில்லை. நான் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.
திரைப்படத்துறையை நான் பெரிதும் மதிக்கிறேன். திரைப்படங்கள் பார்ப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் நான், நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த ஒரு ஆவணப்படத்தில் நான் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். ஆனால், திரைப்படங்களில் நடிக்க ஒருபோதும் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.