பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு – கிளாடியா கோல்டின் வென்றார்..!! l

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு – கிளாடியா கோல்டின் வென்றார்..!!  l

டப்பு ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஹார்டுவேர் பல்லைக்கழகத்தின் பெண் பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தை தொழிலாளர்களில் (labour market) பெண்களின் பங்குகள் பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

2023-24 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே மருத்துவம், இலக்கியம், வேதியியல், இயற்பியல், அமைதி என் ஐந்து துறைக்களுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (அக்டோபர் 9) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வரலாற்றாசிரியர் மற்றும் பொருளாதார ரீதியாக தொழிலாளர்களை முன்னேற்றுவருமான கிளாடியா கோல்டின் பெறுகிறார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், “2023 ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படும் பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு, பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தியதற்காக கிளாடியா கோல்டினுக்கு வழங்கப்பட்டது. பொருளாதார அறிஞர் கிளாடியா கோல்டின் தொழிலாளர் சந்தையில் பெண்களின் வாய்ப்புகளைப் பாதிக்கும் காரணிகள் மற்றும் அவர்களின் பெண் தொழிலாளர்களுக்கு எவ்வளவு தேவை உள்ளது என்பதைப் பற்றிய ஆழமான புரிதலை அவர் வழங்கியுள்ளார்.பெண்கள் பெரும்பாலும் திருமணம், வீடு, குடும்பப் பொறுப்புகள் ஆகியவற்றிற்கு உள்ளேயே அடக்கிவைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் இதில் மாற்றம் உண்டாவதற்கு நேரம் எடுக்கும் என்றும் கோல்டினின் ஆய்வுகள் கூறுகின்றன என நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தில் கிளாடியா கோல்டினின் நுண்ணறிவு அமெரிக்காவுக்கும் மட்டுமின்றி, எல்லைகளைக் கடந்து பல நாடுகளைச் சென்றடைகிறது எனவும் அவரது ஆராய்ச்சி நேற்று, இன்று, நாளை என தொழிலாளர் சந்தைகளைப் பற்றிய சிறந்த புரிதலை நமக்குத் தருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 1946 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி பிறந்தவர். கிளாடியா கோல்டின். பெண்களுக்கான தொழில்கள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தி வருபவர். பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை தொடந்து பொது வெளிகளில் வெளிப்படுத்தி வருபவர். மேலும், மனித வளத்தில் பெண்களுக்கான வாய்ப்புகள் எல்லாம் எவ்வாறு சமூகத்தில் பாதிக்கப்படுகிறது என்பதற்கான அடிப்படை புரிதல்களை வெளியிட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். தொழிலாளர்களின் சந்தையில் பெண்களுக்கான தேவைகள் எந்த அளவில் இருக்கிறது என்று ஆய்வு செய்து அதனையும் தரவுகளாக வெளியிட்டிருக்கிறார் கிளாடியா கோல்டின்.

Related Posts