காவேரி ஒரு கேள்விக்குறி? 1969-1974என இன்றும் தொடர்கிறது…!

காவேரி ஒரு கேள்விக்குறி? 1969-1974என இன்றும் தொடர்கிறது…!

ரலாறு ஒரு முறை நிகழும் போது மிகச் சரியாகவும் அதுவே இரண்டாவது முறை நிகழும் போது கேலிக்கூத்தாகவும் முடியும் என்பது தான் கடந்த கால அரசியல் நடைமுறைகள் ஆகி விட்டது . கடந்த 50 ஆண்டு காலமாக காவிரி நதி நீர் பிரச்சனை அது எவ்வாறு தமிழகம், கேரளம், புதுவை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது என உச்சநீதிமன்றத்தில் பல வகையில் ஆலோசிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு இறுதியாக நடுவர் மன்றம் அமைத்து தீர்வு காண்டும்; இன்னும் முடியாமல் இடியாப்பச் சிக்கலாகத்தான் முடிந்துகொண்டிருக்கிறது. இந்த வருடம் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நீர் கிடைக்கும் என்பதை இன்னும் அறுதிவிட்டுச் சொல்ல முடியவில்லை. கேட்டால் பருவமழை தவறுவது மழை குறைவு போன்ற காரணங்களை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும் என்று அளவிற்கு வெறும் சந்தர்ப்பவாத ஆய்வுகளில் தான் அவை முடிந்து போகின்றன.

உண்மையில் 1892 ,1924ல் பிரிட்டிஷாரின் காலத்தில் மைசூர் அரசருக்கும் சென்னை ராஜதானிக்கும் இடையே ஏற்பட்ட காவிரி நீர் ஒப்பந்தம் 1974இல் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதை தவறவிட்டோம் .அது ஒரு கெடுவினைதான் . அந்த ஒரு தவறு பிற்கால நடவடிக்கை எல்லாவற்றிற்குமே எதிராக முடிந்து விட்டது ஒருபுறம் இருக்க அன்றைய கர்நாடக படு விபரமாக பேச்சுவார்த்தை இல்லாமலும் காவேரி கடைமடை பகுதியான நமது தமிழக ஒப்புதலையும் பெறமால் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி என அங்கே மூன்று அணைகளை தொடர்ந்து தனது எல்லைக்குட்பட்ட காவிரி பகுதியில் கட்டிக்கொண்டனர். இன்னும் விட்டால் அவர்கள் அணைகளைக் கட்டத் தான் செய்வார்கள். அப்படிதான் மேகேதாட் கட்ட பிடிவாதமாக உள்ளனர்.அதற்கு இடையே உச்ச நீதிமன்றத்திலும் நாம் தாக்கல் செய்த வழக்கையும் வாபஸ் பெற்றது இன்னும் பெருங்கேடாய் முடிந்தது.

பின்,எம்ஜிஆர் ஆட்சியில் நடுவர் மன்ற கேட்ட வழக்கை நெடுங்காலம் குழப்பமாக இழுத்துக் கொண்டு வந்தது. இந்த வழக்கால் கலைஞர் ஆட்சியில் வி. பி. சிங் காலத்தில் நடுவர்மன்றம் அமைந்தது. இப்பொழுது சட்டப்படி தண்ணீர் கேட்டு நிற்பது என்பதற்கெல்லாம் யார் பொறுப்பு ஏற்பது. ஆரம்பத்தில் சரி செய்யாமல் தும்பை விட்டு வாலைப் பிடித்துக் கொண்டிருப்பது என்ன வகையில் சேர்த்தி. இதுவரை தமிழக அரசு இந்த காவிரி நதி நீர் பிரச்சனையில் ஒவ்வொரு முறையும் வழக்கில் ஈடுபடும்போதெல்லாம் கர்நாடக அரசின் பித்தலாட்டதானத்தில் முடிந்திருக்கிறது

ஆட்சிக்கு வந்த எம் ஜி ஆர் அப்போது கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ் அவர்களின் நல்லுறவில் காவிரி நீர்ப் பங்கீட்டில் அதிகளவு ( நடுவர் மன்றம், உச்ச நீதிமன்ற வழங்கிய அளவு காட்டிலும் அதிகம்)டி எம் சி நீர் பெற்று தர சூழ்நிலை வந்த போது எதிர் வினைகளாக எம்ஜிஆர் காவேரி இன்னும் அதிக அளவு வாங்க வேண்டும் தமிழக அரசியல் கடசிகளின் அறிக்கைகளால் பின் வாங்கினார். இன்றைக்கு நாம் கேட்கு தண்ணீர் அளவு கூடுதலாகதான் எம் ஜி ஆர் கர்நாடக முதல்வர் குண்டுராவ் ஒப்பந்தம் ஏற்பட்டு இருந்தால் ஓரளவுக்கு காவேரி சிக்கல் அன்றே (1980கள் துவக்கத்தில்)தீர்ந்து இருக்கும்.

தொடர்நது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சட்ட மன்ற தீர்மானங்கள், அனைத்து கட்சி கூட்டங்கள, டில்லி சென்று பிரதமரை சந்திப்பு என பொங்கல, தீபாவளி போல வருடம் வருடம் இதுவும் நடக்கிறது. இந்த நிகழ்வுகள் எம்ஜிஆர் காலத்தில் இருந்து நான்கு முறை நானே பங்கேற்றுள்ளேன். காவேரி பிரச்சனையில் பொதுநல வழக்குகளை தொடர்ந்து இருக்கிறேன். இன்று வரை உச்ச நீதிமன்ற மற்றும் நடுவர் மன்ற தீர்ப்புகளை மதிக்காத ஜென்மங்களாக கா்நாடகம் இருக்கிறது .

ஆனால் இன்று சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் காவிரி பிரச்சனை பற்றி ஏதோ சிந்தனை குழப்பங்களை ஏற்படுத்துகிறார் தெளிவான முடிவுகள் ஏதும் அவரிடம் இல்லை அதற்கான அறிவுரை சொல்லவும் அவருக்கு உடன் யாரும் இல்லை மழை பெய்தால் காவேரி வெள்ளம் வந்துவிடும் என்பதற்கு அதன் மீது கட்டப்படும் அரசியல்கள் ஒருபோதும் துணை செய்யாது. மக்களின் மீது இறையாண்மை உள்ள தலைவர்கள் வந்தால் மட்டுமே இது சாத்தியம்.காவேரி விவகாரத்தில் அரசு நிறைவேற்றும் தனித்தீர்மானத்தின் போது சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் காங்கிரசோடு கூட்டணிவேறு கொள்கை வேறு என பதிலுரை, சரி காவேரி தமிழகத்தின் உரிமை- உயிர் நாடி பிரச்சனை அல்லவா? இந்த வழ வழா கொழ கொழா என்று பேசுகிறதிலேயே தெரிகிறது, ஸ்டாலின் இதை தீர்க்க மாட்டார், அவரால் முடியாது. இவர்களின் தோழமை காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடகம் காவேரியில் தண்ணீர் விடாது. இது தான் திராவிடப் பெரு வெளி…திராவிட மாடல், விடியல்

நாம் வாக்களித்து இதுவரை வெற்றி பெற்று சென்ற எம்பி- எம்எல்ஏ ஏன் மந்திரி ஆன பலருக்கும் காவேரி பிரச்சனை குறித்து ஒன்று தெரியாது.நாம் வாக்களித்து இதுவரை வெற்றி பெற்று சென்ற எம்பி- எம்எல்ஏ ஏன் மந்திரி ஆன பலருக்கும் காவேரி பிரச்சனை குறித்து ஒன்று தெரியாது. இதுதான் இங்கு நிலை….!

#கேஎஸ்ஆர்போஸ்ட்
9-10-2023

error: Content is protected !!