பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரத்து?

பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரத்து?

பெட்ரோல் & டீசல் உபயோகத்தைக் குறைக்க உதவும் பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க அவற்றுக்கான விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பேட்டரி வாகனங்களுக்குப் பதிவுக் கட்டணத்தில் விலக்கு அளிப்பதற்கான பரிந்துரையும் உள்ளது.

இந்த வரைவை அமைச்சகம் மே 27ம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் அதாவது ஜூன் 27க்குள் வரைவு குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்கள் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் பெறப்பட்ட பிறகு அவற்றின் மீது அமைச்சகம் ஆலோசனை நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் வரைவின் மீது தீர்மானமான முடிவுகள் எடுக்கப்பட்டு மோட்டார் வாகன சட்டம் 1989 விதிமுறைகளில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்வதற்கான அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!