ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் – தமிழகத்தில் அனுமதி இல்லை!

ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் – தமிழகத்தில் அனுமதி இல்லை!

எதிர்வரும் 31.12.2020 அன்று இரவு நடத்தப்படும் 2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என்ற ஒரு அறிவிப்பினை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

ஆம்.. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் 31.12.2020 மற்றும் 1.1.2021 ஆகிய நாட்களில் பொதுமக்கள் கடற்கரையில் அனுமதிக்க மாட்டார்கள் என்ற ஒரு அறிவிப்பினை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பொதுவாகவே ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடி தங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்து கொள்வார்கள்.உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், ரெஸ்டாரன்ட், ஹோட்டல் உள்ளிட்ட இடங்கள் வழக்கம்போல செயல்பட்டாலும் கூட இரவு நேர ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மட்டும் இந்த அனுமதி கிடையாது என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தற்போது வரை கொரோனா தொற்று இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் 2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனுமதி இல்லை என்பதால் பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு வரவேண்டாம். அங்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற ஒரு வேண்டுகோளையும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!