June 2, 2023

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது?!

🦉இப்படி ஒரு சேதி பரவுது🥵👇

இத்தன நாள் இருக்கறது கொரானாவோட தம்பியாம். இப்போ யூரோப்- ல வந்திருக்கறது இவனுக்கு அண்ணனாம். இன்னும்வேகமா ஆக்ரோஷத்தோட பரவுவானாம். திரும்ப எல்லாரும் லாக்டவுன் போட்டாச்சு. நமக்கு மெதுவா மார்ச் வாக்குல அண்ணன் எட்டிப்பாப்பாரு. சோ வர்ற வருஷமும் கூப்புல தான். கடவுளே என்னப்பா செய்ய போற.🙏 -இப்படி ஒரு செய்தி வாட்ஸ் அப்-பில் தீயா பரவுது.

ஆம்.. இங்கிலாந்தில் தான் உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. முன்கள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது அந்த நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த நிலையில் வைரஸ் பரவல் காரணமாக வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இது குறித்து எச்சரித்துள்ள அந்நாட்டு அரசு, கிறிஸ்துமசை ஒட்டி அறிவிக்கப்பட்ட கொரோனா தளர்வுகளை மாற்றி, மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை நேற்று முதல் விதித்திருக்கிறது. பல ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்திருக்கின்றன.

இந்நிலையில், இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது ஏற்கனவே பரவிய வைரஸை விட வித்தியாசமாதாக இருப்பதாகவும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல வளர்சிதை மாற்றம் அடைந்து இருந்ததையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மேலும், இதன் தொற்றும் தன்மை 70 சதவீதம் அதிகம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் இருந்து பிற நாடுகளுக்குப் பரவுவதைத் தடுப்பது குறித்து ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுடன் ஆலோசித்து வருவதாக நெதா்லாந்து கூறியுள்ளது.

மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு பிரதமா் அலெக்ஸாண்டா் டிக்ரூ கூறுகையில், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான அவகாசத்தைப் பெறுவதற்காக, பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை 24 மணி நேரம் அமலில் இருக்கும். அந்தத் தடையை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.