’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாச் செய்திகள்!
’ஒரு நொடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் ’ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன். இந்தப் படத்தை மணிவர்மன் இயக்கியுள்ளார். அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இந்தப் படம் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

அமோகம் ஸ்டுடியோஸ் விஜயன், “எங்கள் தயாரிப்பு நிர்வாகத்தின் முதல் படம் இது. ‘ஒரு நொடி’ படத்தின் பிரிவியூ ஷோவில் இருந்துதான் இந்தப் படம் தொடங்கியது. அந்த அணி மீது எங்களுக்கு நம்பிக்கை வந்தது. அவர்களை வைத்துதான் ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் தயாரித்தோம். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவு கொடுங்கள்” என்றார்.
ஒளிப்பதிவாளர் கேஜி, “பேய்ப்படம் என்பது ஒளிப்பதிவாளருக்கு சவாலான விஷயம். அதை நான் சரியாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள்”
கலை இயக்குநர் ராம், “இயக்குநர் எதிர்பார்த்திருப்பதை நாங்கள் சரியாக செய்திருக்கிறோம். டெக்னிக்கலாக இந்தப் படம் சவாலானது. அதனால், படக்குழுவினர் கடுமையாக உழைத்துள்ளனர். படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். பார்த்துவிட்டு சொல்லுங்கள்”
எடிட்டர் குரு சூர்யா, “டீசர், டிரைய்லர் கொடுத்த ஃபீல் நிச்சயம் படத்திலும் இருக்கும். ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது”
நடிகர் மைத்ரேயன், “இது எனக்கு முதல் படம். இந்த நிகழ்வின் விழா நாயகன் சஞ்சய். அவரது இசை அருமையாக இருக்கும். இரவு நேரத்தில்தான் பெரும்பாலும் ஷூட் இருக்கும். ஆனால், நடிகர்கள் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் எந்தவிதமான சோர்வும் இல்லாமல் கடினமாக உழைத்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி”.
நடிகை ரக்ஷா, “ஜூலை 18 இந்தப் படம் வெளியாகிறது. எல்லோரும் கடினமாக உழைத்துள்ளோம். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவு தேவை. படத்தில் வாய்ப்புக் கொடுத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.
நடிகர் தலைவாசல் விஜய், “இந்தப் படத்தின் புரொடக்ஷன் மேனேஜர் மூலமாகதான் வாய்ப்பு வந்தது. படத்தில் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத முக்கிய கதாபாத்திரம். தனக்கு என்ன வேண்டும் என்பதில் இயக்குநர் மணி தெளிவாக இருப்பார். தமன், மாளவிகா கடினமாக உழைத்துள்ளனர். ஜூலை 18 படம் வெளியாகிறது. வாழ்த்துக்கள்”.
நடிகை மால்வி மல்ஹோத்ரா, “’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் தொழில்நுட்பக் குழுதான் பெரிய பலம். அவர்கள் இந்தப் படத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். தமன் திறமையான நடிகர். நிச்சயம் அவருக்கு அடுத்தடுத்த நல்ல படங்கள் கிடைக்கும். தமிழ் சினிமாவில் நல்ல கதைக்கு வரவேற்பு உண்டு. ‘ஜென்ம நட்சத்திரம்’ எங்கள் அனைவருக்கும் ஸ்பெஷலான படம். நீங்கள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இருக்கும். கிளைமாக்ஸ் வரை அடுத்து என்ன என்பதை ரசிகர்கள் யூகித்து கொண்டே இருப்பார்கள். அதிர்ச்சிகரமான ஹாரர் நிகழ்வை சுற்றி கதை இருக்கும்” என்றார்.
இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம், “எனக்கு மீண்டும் இசையமைக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் எனக்கான கிரியேட்டிவ் ஸ்பேஸ் கொடுத்ததற்கு நன்றி. மொத்த படக்குழுவும் கடினமாக உழைத்துள்ளனர். படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளது. அதில் டூயட் பாடலை சிநேகன் சார் எழுதியிருக்க நானும் சின்மயி மேமும் சேர்ந்து பாடியிருக்கிறோம். இன்னொரு பாடலை நீங்கள் அனைவரும் பாராட்டி கொண்டிருக்கிறீர்கள். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.
நடிகர் தமன், “’எக்ஸோர்சிஸ்ட்’, ‘ஓமன்’, ‘போல்டர்ஜிஸ்ட்’ மற்றும் பல கிளாசிக் ஹாரர் படங்கள் இப்போதும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் கிட்டத்தட்ட ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும். இந்தப் படம் ஸ்பின் ஆஃப் போல அதாவது ப்ரீக்குவலாக இருக்கும். எப்படி ‘ஒரு நொடி’ படத்தின் கிளைமாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியானதாக இருந்ததோ அதுபோல இந்தப் படத்தின் கிளைமாக்ஸூம் அதிர்ச்சியானதாகவும் கணிக்க முடியாததாகவும் இருக்கும். ஒட்டுமொத்தக் குழுவும் குடும்பம் போல பழகியிருக்கிறோம். எங்களை வாழ்த்தும் ரசிகர்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி. சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன். ‘ஒரு நொடி’ படத்தை விட இது இன்னும் மேம்பட்டதாக இருக்கும். ’ஒரு நொடி’ படம் பார்த்தப் பிறகு எப்படி எங்கள் அனைவருக்கும் இந்த வாய்ப்பு வந்ததோ அதுபோலவே, இந்தப் படம் பார்த்த பிறகும் எங்கள் அனைவருக்கும் வாய்ப்பு வரும். தலைவாசல் விஜய் சாருடன் எனக்கு சில நாட்கள் மட்டுமே காம்பினேஷன் சீன் இருந்தது. அறிவழகன் சாரின் ‘ஈரம்’ மற்றும் ‘சப்தம்’ படங்களின் சவுண்ட் குவாலிட்டி அற்புதமாக இருக்கும். ‘லெவன்’ பட இயக்குநர் லோகேஷூக்கும் வாழ்த்துக்கள். ஈரோடு மகேஷ் என்னைப் போலவே. என்னுடைய ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் போலவே அடுத்த படத்திலும் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுப்போம். அனைவருக்கும் நன்றி! இயக்குநர் மணிவர்மன், “’ஒரு நொடி’ படம் பார்த்த பிறகு விஜயன் சார்தான் ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்கான வாய்ப்பு கொடுத்தார். அவர் இல்லாமல் இந்த படம் நடந்திருக்காது. தயாரிப்பாளர் சுபாஷினி மேம் இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு நன்றி. பல சவாலான அனுபவங்களுடன் இந்தப் படத்தில் எங்களுக்கு கிடைத்தது. 29 இரவுகள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். பட சமயத்தின்போது எனது ஒளிப்பதிவாளர் கேஜி டைபாய்டால் பாதிக்கப்பட்டார். காலையில் மருத்துவமனை கவனிப்பில் மருந்துகள் எடுத்துக் கொண்டு இரவு படப்பிடிப்பிற்காக வந்தார். நான் நினைத்ததை திரையில் கொண்டு வரக் காரணமாக இருந்த எனது குழுவினருக்கு நன்றி. ‘ஜென்ம நட்சத்திரம்’ திரைப்படம் ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நிச்சயம் உங்கள் ஆதரவு தேவை” என்றார்.


