நேபாள் பார்லிமென்ட் கலைப்பு: மே முதல் வாரத்தில் தேர்தல்!

நேபாள் பார்லிமென்ட் கலைப்பு: மே முதல் வாரத்தில் தேர்தல்!

நேபாள பார்லிமென்டை கலைக்கும்படி, அந்நாட்டு பிரதமர் கேபி ஷர்மா ஒலி பரிந்துரை செய்துள்ளார். இதனை ஏற்று பார்லிமென்ட்டை கலைத்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், அடுத்த ஆண்டு ஏப்., 30 – மே 10 இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நடக்கும் என அறிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கும், முன்னாள் பிரதமர் பிரசண்டாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், கட்சியில் பிரதமருக்கான ஆதரவு குறைந்து வந்தநிலையில், பாராளுமன்றத்திலும் மெஜாரிட்டியை இழந்தார்.

இந்நிலையில், இன்று காலை பிரதமர் சர்மா ஒலி அமைச்சரவை கூட்டத்தை அவசரமாக கூட்டினார். இக்கூட்டத்தில் அதிருப்தி தலைவர்களை சமாதானம் செய்து ஆட்சியை தொடர்வதற்கு பதிலாக, பாராளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்யப்பட்டது.

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. பிரதமர் சர்மா ஒலி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு நேரில் சென்றும் தனது முடிவை தெரிவித்தார். இந்த பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு பாராளு மன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.மேலும், ஏப்.,30- மே 10 இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நடக்கும் என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, சர்மா ஒலி, தேர்தல் கமிஷனர் மற்றும் அதிகாரிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்

Related Posts

error: Content is protected !!