June 7, 2023

நாளைய இயக்குனர் பட்டத்தை வெல்லப்போது யார்? – தீபாவளி ஸ்பெஷல்!!

நாளை என்னும் எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் படைப்பாளிகளை உலகிற்கு அறிமுகப்  படுத்தும் ஓர் உன்னத நிகழ்ச்சியான நாளைய இயக்குனர் சீசன் 6 ன் இறுதிப்போட்டி தீப ஒளித் திருநாளன்று சிறப்பு நிகழ்ச்சியாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

பிரம்மாண்டமான அரங்கத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், இயக்குனர்கள் வெற்றி மாறன், சேரன், பாண்டியராஜன், யூகி சேது சிறப்பு நடுவர்களாக பங்கேற்க, சிறப்பு விருந்தினர்களாக சினிமா நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி, கதிர், நதியா, கருணாகரன், நமீதா, இயக்குனர்கள் பி.வாசு, எஸ்.ஏ. சந்திரசேகர் , அருண்ராஜா காமராஜ், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

32 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பயணத்தில், 8 பேர் இறுதிப்போட்டியில் மோதினர். இதில் நாளைய இயக்குனர் என்ற பிரம்மாண்ட பட்டத்தை வெல்லப்போவது யார்? என்பதை அறிய வருகிற அக்டோபர் 27-ந் தேதி, தீப ஒளித் திருநாளன்று பிற்பகல் 2.30 மணிக்கு கலைஞர்தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.