June 7, 2023

டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தை சேர்ந்த மும்பை மிர்ரர்,பூனே மிர்ரர் பத்திரிக்கைகள் நிறுத்தம்!

பிரபல டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தை சேர்ந்த மும்பை மிர்ரர்,பூனே மிர்ரர் பத்திரிக்கை களை நிறுத்த போவதாக டைம்ஸ் குரூப் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் வியாபாரங்கள், தொழிற்சாலைகள, கேளிக்கை கூடங்கள் என அனைத்து துறைகளில் பொருளாதார சரிவு ஏற்பட்டது.இதனால் பல பேர் தங்களின் தொழில்களை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.இந்த கொரோனா பாதிப்பால் பிரபல ஆங்கில பத்திரிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம்.டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தை சேர்ந்த மும்பை மிர்ரர்,புனே மிர்ரர் பத்திரிக்கைகளை நிறுத்த போவதாக டைம்ஸ் குரூப் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.மும்பை மிர்ரர் பத்திரிக்கையானது மும்பையில் நிகழும் சம்பவங்களை மட்டும் மக்களுக்கு எடுத்துக்காட்ட பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒன்று.இது 2005 ஆம் ஆண்டு மே 30 ம் தேதி தொடங்கப்பட்டது.நாள் ஒன்றுக்கு கிட்டத்திட்ட 7 லட்சம் செய்தி தாள்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனையாகி வந்தது.இதில் பூனே மிர்ரர்,அகமதாபாத் மிர்ரர், பெங்களூர் மிர்ரர் ஆகிய பதிப்புகளும் இருக்கிறது.

கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி போய் இருந்தனர்.அந்த நேரத்தில் மக்கள் அதிகம் செலவிட்டது தங்களுடைய ஸ்மார்போனில் தான்.ஆன்லைனில் கேம் விளையாடுவது,படிப்பது, வெளி நடப்பை அறிந்துக்கொள்வது இப்படி அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது.இதனால் செய்தித்தாள்களை வாங்கி படிப்பதில் மக்கள் ஆர்வம் காட்ட வில்லை.அதனால் பொருளாதார ரீதியான சிக்கல்களை டைம்ஸ் குரூப் சந்தித்து வந்துள்ளது.


புனே மிர்ரர் செய்தித்தாள் முழுவதுமாக நிறுத்தப்படுகிறது.மும்பை மிர்ரர் பத்திரிக்கையை மட்டும் வாராந்திரமாக மீண்டும் தொடங்கி, முழுமையாக டிஜிட்டலில் இனி சேவையை தொடர உள்ளோம் .எனவே பல மாதங்கள் ஆலோசித்து இந்த கஷ்டமான முடிவை எடுத்துள்ளதாக டைம்ஸ் குரூப் தெரிவித்துள்ளது.

மேலும் டைஸ் குரூப்பின் அகமதாபாத் மிர்ரர், பெங்களூர் மிர்ரர் ஆகிய பதிப்புகள் தொடர்ந்து செயல்படுமா,நிறுத்தப்படுமா என்பது பற்றி டைம்ஸ் குரூப் இதுவரை அறிவிக்கவில்லை.