ச்சிச்சீ.. இந்த சோஷியல் மீடியா புளிக்குது.. – மோடி சலிப்பு!

உலக அளவில் சமூகவலைதளங்களில் அதிகம் பிரபலமானவராகவும், அதிகம் பின்தொடா்பவா் களைக் கொண்டவராகவும் திகழ்கிறார் மோடி. அவரை ட்விட்டரில் 5.33 கோடி பேரும், ஃபேஸ் புக்கில் 4.4 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் 3.52 கோடி பேரும் பின் தொடா்ந்து வரும் சூழலில் அனைத்து சமூகவலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ள தகவல் கூட ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற நாளில் இருந்து சமூக ஊடகங்களில் மிகவும் ஆர்வமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு வருகிறார். இளைஞர்களை ஊக்கப்படுத்துவது, தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்ற பல்வேறு விஷயங்களில் மக்களுடன் சமூக ஊடகங்கள் வழியாகப் பிரதமர் மோடி நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார். அந்த வகையில் ட்விட்டரில் 53.3 மில்லியன் மக்களும், முகநூலில் 44 மில்லியனும், இன்ஸ்டாகிராமில் 35.2 மில்லியனும், யூடியூப்பில் 4.5 மில்லியனும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு செப்டம்பா் மாத நிலவரப்படி அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபா் பராக் ஒபாமாவுக்கு அடுத்தபடியாக சுட்டுரையில் அதிகமானோா் பின்தொடரும் தலைவராக மோடி உள்ளாா். சுட்டுரையில் 5 கோடி பேரால் பின் தொடரப்படுபவா் என்ற பெருமையைப் பெற்ற முதல் இந்தியரும் மோடி தான்.
இதனிடையே ட்விட்டா்), ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி திடீரென தெரிவித்துள்ளார். இது தொடா்பாக அவா் வெளியிட்ட பதிவில், ‘வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து விலகிவிடலாம் என்று யோசித்து வருகிறேன். இது தொடா்பான விவரங்களை விரைவில் அறிவிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமூகவலைதளங்களில் இருந்து விலக வேண்டாம் என்று பலரும் சுட்டுரை வாயிலாக பிரதமரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இது தொடா்பாக ‘நோ சாா்’ ‘நோ மோடி நோ ட்விட்டர்’ என்பது ‘ஹேஷ்டேக்’ முன்னிலை பெற்றுள்ளது.
பிரதமரின் இந்த அறிவிப்பு எதிர்க்கட்சியினா் மற்றும் எதிர்்ப்பாளா்களின் விமா்சனத்தில் இருந்தும் தப்பவில்லை. இது தொடா்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘வெறுப்புணா்வை விட்டுவிடுங்கள்; சமூக வலைதளங்களை விட வேண்டாம்’ என்று அறிவுரை செய்துள்ளார்