ஊடக சாதனையாளர் ராஜாமணியின் ‘ஒரு வானவில் வாழ்க்கை’ நூல் வெளியீடு!
உலகின் மிகக் கவுரமாக கருதப்படும் fullbright Scholarshipக்கு தேர்வு பெற்று அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர்..!மலேசியாவில் புகழ் பெற்ற ஆஸ்ட்ரோ ஊடக நிறுவனத்தின் தமிழ் வானொலி தொலைக்காட்சியில் பொறுப்பாளராகப் பணியாற்றியபோது பல புதுப்புது நிகழ்ச்சிகளை வழங்கி அந்த நாடு டி.வி ரசிகர்களின் பேரபிமானத்தைப் பெற்றவர்..!கள்ளக்குறிச்சி அருகே கச்சிராப்பாளையம் சொந்த ஊர்.டாக்டருக்குப் படிக்க ஆசைப்படினார்.. ஆனால் பி. எஸ்லிதான் கை கூடியது..!1975இல் சென்னை தூத்தர்ஷனில் சேர்ந்தார்..!பூனா ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி..கவின் நிகழ்ச்சிகள் தயாரிப்பில் நிபுணத்துவம்..!ஏராளமான டாகுமென்டரிஸ் தயாரித்தவர்..!லெப்ரசி பற்றி இவர் தயாரித்த டாகுமென்டரி Beyond the stroms ஆவணப் படம் சர்வதேச பெர்லின் திரைப்பட விழாவில் முதல் பரிசு பெற்றது.தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி! அவர்தான் டாக்டர் சி.எம்.ராஜாமணி.

இந்த காலத்தில் இப்படியும் ஒரு சாதனையாளர்!–ஒன்றுமில்லாதவர்கள் எல்லாம்..அலட்டிக்கொண்டு அலையும் காலத்தில்-அமைதி அடக்கம்..திறமை-செம்மையான நிர்வாகம். எப்போதும் புன்னகை! இவரைப் பார்த்தால் இவ்வளவு பெரிய பிரமுகர் என்று சொல்லமுடியாது.அத்தனை பண்புகளையும் சாதனைகளையும் அடக்கி வைத்துக்கொண்டு ஆர்ப்பரிப் பில்லா நட்பு.மறைந்த பிரபல ரேடியோ அண்ணா ஞானப்ரகாசம் அவர்களின் சகோதரர் இவர்! இவரின் ஊடகப் பணி வரலாறு பல புதிய ஊடகவாசிகளுக்கு பயன் அளிக்கும் விதத்தில் உருவாகி இருக்கிறது.
பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ராணி மைந்தன் உடன் பயணித்து எழுதியுள்ள நூலுக்கு பெயர் ‘ஒரு வானவில் வாழ்க்கை’ என்ற தலைப்புடன் தயாராகி நேற்று வெளியிடப்பட்டது. ராணிமைந்தன், வாழ்க்கை வரலாறு நூல்கள் எழுதுவதில் வித்தகர்.( தகுதி இல்லாதவர்களை இவர் எழுதுவதில்லை என்பது வரலாறு). SPM,ஏவிஎம் சரவணன்,RMV,MSV போன்று 7௦ க்கும் மேற்பட்ட ஜாம்பவான்களை பற்றி வடித்துள்ள ராணிமைந்தனின் கைவண்ணத்தில் இந்த -‘ஒரு வானவில் வாழ்கை’ நூல் வெளியீடு சிறப்பாக அமைந்துள்ளது.!

அழகான வண்ணங்களுடன் இருக்கும் வானவில்லைக் கையால் தொட்டுப்பார்க்க எல்லோருக்கும் ஆசை இருக்கும்தானே? உண்மையில் நம் கையால் தொட முடிகிற அளவுக்கு வானவில், ஒரு பொருள் அல்ல. கானல் நீர் போல ஒளிச்சிதறல் மற்றும் எதிரொலித்தல் மூலம் நம் கண்களுக்குத் தெரிகிற ஒரு பிம்மம் மட்டுமே.அதை சுட்டிக் காட்டும் நோக்கில் ‘ஒரு வானவில் வாழ்க்கை’ என்ற தலைப்பிலான வழிகாட்டி/வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா ராஜாமணி பணியாற்றிய University of Madras department of Journalism & communication அரங்கிலேயே நடந்தது பலருக்கும் பெருமை ஏற்படுத்தியதென்னவோ நிஜம்! அழைப்பிதழ் சொன்னபடி(இணைப்பு) எல்லாம் கச்சிதம்! Dr.ராதாகிருஷ்ணன் IAS முதல் அனைவரும் சிறப்பான-நயமான -நச் வாழ்த்துரைகள்.!


