உதயம் தியேட்டரின் இன்றைய நிர்வாகிகளின் உள்ளடி வேலை!

உதயம் தியேட்டரின் இன்றைய நிர்வாகிகளின் உள்ளடி வேலை!

சினிமாவில் ஏற்கெனவே எக்கச்சக்கமான பிரச்னைகள் இருக்கிறது.அத்தனையையும் தாண்டிதான் வாரா வார்ம் சில பல திரைப்படங்கள் வெளியாகின்றன. அப்படி கோடி கணக்கில் உருவான பல படங்கள் வெளியாகி ரிலீஸான அடுத்த நாளே இணையத்தில் லீக்-காகி வருமானத்தை கெடுத்து விடுகிறது. அத்துடன் பெரும்பாலான தியேட்டர்கள் அன்றாடம் வசூலாகும் தொகையை உண்மையான கணக்குடன் தயாரிப்பாளர்களிடம் சேர்க்கும் போகும் குறைந்து வருகிறது. இது குறித்து நம்மிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு சீனியர் புரொடியூசர், “இப்போ பார்த்தீங்கண்ணா டாப் ஹீரோக்கள் பலரும் தயாரிப்பாளர்களாக மாறி வாராங்க.. அதை கவனிச்சீங்களா?அதுக்குக் காரணம் இங்கே தயாரிப்பாளர்கள் குறைந்துகொண்டே போவதுதான். இதே தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த ஏ.வி.எம்., சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது படத் தயாரிப்புகளை வெகுவாகக் குறைத்துக்கொண்டன. ஆஸ்கார் பிலிம்ஸ் பற்றி கோலிவுட்டே மறந்து விட்டது. இதுக்கெல்லாம் காரணம், தற்போது நிகழும் அடுத்தடுத்த மாற்றமும் நம்பிக்கையின்மையும்தான்.” என்றார்.

மேலும் அவர் பேசிய போது, “இந்த நம்பிக்கை மோசடியை யார் யாரோ பண்றதைக் கூட ரொம்ப குறை சொல்ல முடியலை. ஆனா இந்த சென்னை உதயம் தியேட்டர் வளாகத்தை பிடிச்சு வச்சிருக்கற ஒரு கும்பல் பண்ற அட்டகாசத்துக்கு அளவே இல்லாமல் போ கொண்டிருக்குது. அதாவது இந்த உதயம் குரூப் தியேட்டர்கள் கட்டியவங்களோட குடும்ப பிரச்னையால் முடக்கப்ப்பட்டு கோர்ட்டால் ஒரு போர்ட் ஆஃப் டைரக்டர்கள் போடு நடத்திக்கிட்டு வாராங்க. இங்கேயே அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையை விட எக்ஸ்ட்ரா விலை வச்சு கவுண்டர் மூலமே சேல்ஸ் பண்றாங்க. கூடவே அங்கே உள்ள ஸ்டாப்புகள் மூலம் வாசாலில் பிளாக்-கா விக்கறாங்க. அப்படி வித்து கிடைக்கற பணத்தை கோர்ட்டால் போடப்பட்ட போர் டைரக்டருங்களே டெய்லி பங்கி போட்டுக்கிறாங்க.

இந்த விஷயத்தை தெரிந்து போ கேக்கற தயாரிப்பளர்களை அவங்க சட்டை செய்யறதே இல்லை. யாராவது இதை விடியோவா எடுத்து போலீஸ் ஸ்டேஷன்லே போய் புகார் கொடுக்க போனாலும் ரிட்டயர் ஜட்ஜ் மேலே புகார் வாங்க முடியாதுன்னு திருப்பி அனுப்பிடுறாங்க. இப்படி தங்களுக்கு கிடைச்ச வாய்ப்பை வச்சு அரசாங்கத்தையும், தயாரிப்பாளர்களையும் ஏமாத்தி ரசிகர்களிட கொள்ளை அடிக்கும் போக்கை கண்டுக்க ஆளில்லை என்பதுதான் ரொம்ப சோகம்” என்றார்

error: Content is protected !!