லவ் மேரேஜ் – விமர்சனம்!

லவ் மேரேஜ் – விமர்சனம்!

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வெளியான ‘சின்னதம்பி’ படத்தில் ‘எனக்குக் கல்யாணம், எனக்குக் கல்யாணம்..’ என்கிற வசனம் மிகப் பிரபலம். அதில், திருமணம் நடக்காத விரக்தியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கையில் தாலிக்கயிறுடன் ஊர் முழுக்கச் சுற்றித் திரிவார். அதுபோலத்தான் 90’ஸ் கிட்ஸ் குழந்தைகள் பலர் எப்போது கல்யாணம் நடக்கும் என்று ‘விழி’ மேல் வழிவைத்து காத்துக் கிடக்கின்றனர் என்று சமூக ஊடகப் பக்கங்களில் அடிக்கடி கேலி, கிண்டலாகப் பதிவுகள் இப்போதும் வருவதைப் பார்க்கலாம்.அப்படியான் ஒரு முதிர் கிட்ஸுன் மண வாழ்க்கையுடன்    திருமணத்துக்கு வயது ஒரு தடையல்ல  என்பது மட்டுமல்ல ஜாதியும் குறுக்கே நிற்காது என்று ஜாலியாக சொல்லும் படமே இந்த லவ் மேரேஜ்.

அதாவது உரிய – அதாவது 25 வயது முதல் திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்தி ஏகப்பட்ட வரங்களைக் காட்டியும் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளாமல் காலம் கடத்தினார் ராம் (விக்ரம் பிரபு). 30 வயதில் திருமணத்துக்கு தயாராக இருந்தும் பார்க்கும் பெண்கள் அவரை ரிஜெக்ட் செய்கிறார்கள்.அதே சமயம் `இன்னமுமா திருமணம் ஆகலை?’, `இவனுக்கு ராசியில்லை’, ` எதோ குறை இருக்கு’ எனச் சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் கமென்ட்டுகளால் நொந்து போய் எதாவது ஒரு பெண் கிடைத்துவிட்டால் போதும் என இருக்கிறார். ஒரு வழியாக கோபி செட்டிபாளையத்தில் அம்பிகா (சுஷ்மிதா பட் ) என்ற பெண்ணை பார்க்க குடும்பத்துடன் செல்கிறார் ராம். இருவருக்கும் திருமணம் நிச்சயித்து ஊருக்கு திரும்ப முயலும்போது அவர்கள் வந்த வண்டியில் கோளாறு ஏற்படுகிறது. இதனால் இன்று ஒரு இரவு பெண் வீட்டில் தங்கிவிட்டு, நாளை காலை செல்லலாம் என முடிவு செய்கிறார்கள். ஆனால், அந்த சமயத்தில் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் பெண் வீட்டில் தங்கி விடும் சூழல் ஏற்படுகிறது. இந்த சமயத்தில், கட்டிக்கபோகும் பெண்ணிடம் பேசி பழகி நெருக்கமாக வேண்டும் என முயற்சி செய்கிறார் விக்ரம் பிரபு.ஆனால், கதாநாயகியோ வேறு ஒருவரை காதலித்து வருகிறார். அவர் வேறொரு சாதி என்பதால் இவர்கள் திருமணத்திற்கு கதாநாயகியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. அதற்கு பதிலாக விக்ரம் பிரபுவை தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்துவிட்ட சேதி தெரிய வருகிறது.இப்படியிருக்க, ஒரு நாள் தான் காதலித்து வந்தவனுடன் கதாநாயகி ஓடிப்போய் விடுகிறார். இதனால் திருமணம் நின்று போக, கதாநாயகன் விக்ரம் பிரபு அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழ, அதன்பின் என்ன நடந்தது என்பதே லவ் மேரேஜ் படத்தின் கதை..!

நாயகன் விக்ரம் பிரபுக்கு இது மிகப் பொருத்தமான கேரக்டர். திருமணத்துக்கு பெண் கிடைக்கவில்லை என்று மற்றவர்கள் நக்கலாக பேசும்போதும், கிண்டல் செய்யும்போதும் கூனிக் குறுகிப்போயும், கண்களில் பரிதாபத்தையும், ஏமாற்றத்தையும் காட்டி அசத்துகிறார். அடிசினலாக நிச்சயிக்கப்பட்ட நாயகி சுஷ்மிதா பட்டும் கை நழுவிப் போய்விட, அவர் தங்கை மீனாட்சிக்கு தான் மீது அரும்பும் காதலை ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் தவிக்கும் போதும் அற்புதமாக உணர்வுகளை வெளிப்படுத்தி சிவாஜி பேரண்டா என்று சொல்ல வைத்து விடுகிறார்.

ஒரு வகையில் ஹீரோயினான சுஷ்மிதா பட் முகத்தில் ஒரு சோக ரேகை நிழலாடும்போதே சந்தேகம் தட்டி விடுகிறது. அதை கன்ஃபார்ம் செய்ய அவர் ஷாக் ஒரு வகையில் டிவிஸ்ட். அதன் பிறகு கதையை சோகத்தில் ஆழ்த்தாமல் சுவைபட அமைத்திருப்பது புத்திசாலித்தனம்.

2வது நாயகியாக வரும் மீனாக்ஷி தினேஷ் சுட்டித்தனமான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ரமேஷ் திலக் கோஷ்டி காமெடி அரட்டையடிக்கின்றனர். வில்லன் இல்லாத குறையை போக்கிவிடுகிறார் அருள்தாஸ் கேஷூவல் அப்பாவாக நடித்து கவர்கிறார் கஜராஜ்.

எம் எல் ஏவாக மின்னல்போல் வந்து சென்றாலும் வழக்கமான நக்கலான பேச்சால் புன்னகை பூக்க வைத்து விடுகிறார் சத்யராஜ்.

கேமராமேன் மதன் கிறிஸ்டினின் கண்கவர் ஒளிப்பதிவாலும், மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டனின் இசையாலும் இந்த லவ் மேரேஜ் படத்தை ரசிக்க வைத்து விடுகிறார்கள். குறிப்பாக மிஷ்கின் பாடிய ‘எடுடா பாட்டிலை’ பாட்டு நல்ல வைப்.

மொத்தத்தில் 90ஸ் கிட்ஸ் இன்றைக்கும் திருமண புரிதல் இல்லாமல் உலா வரும் போக்கைச் சுட்டிகாட்டி நல்வழிப்படுத்த முயல்வதில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறது.

மார்க் 3/5

CLOSE
CLOSE
error: Content is protected !!