தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றிப்புட்டாஹ!
மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு கடந்த ஆட்சியின்போது நிறைவேற்ற முடியாமல் போன திட்டங்கள் அனைத்தையும் தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தினால் இந்த ஆட்சியில் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது , இதேபோல், ராணுவ அதிகாரிகளுக்கு பதிலாக அவர்களது மனைவிமார்கள் வாக்களிக்கலாம் என்ற முறை அமலில் இருந்ததுபோல், இனி பெண் ராணுவ அதிகாரிகள் ராணுவத்தில் இருந்தால் அவர்களது கணவர் வாக்களிக்கலாம் என்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதிக்கு வகையில் கொண்டு வரப்பட்ட தேர்தல் சீர்திருத்த மசோதாவை மக்களவையில் மோடி அரசு நிறைவேறியது.
நம் நாட்டில் போலி வாக்காளர்களை தவிர்க்க வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி மத்திய அரசு 4 தேர்தல் சீர்திருத்தங்களை செய்து, அதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றது. இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் கொண்டுவதற்குத் தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது. அதற்கு ஏற்றார்போல், குடிமக்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து, முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்கும் வகையில் தேர்தல் சீர்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
மோடியின் மத்திய அரசு அமைச்சரவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்யப்பட்டபோதே தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக எந்த வித கருத்துக் கேட்போம் அவகாசமோ எதுவும் வழங்காமல் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.
https://twitter.com/aanthaireporter/status/1472836111420461056
தேர்தல் திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து முழுக்கங்களை எழுப்பினர். பின்னர் எதிர்க்கட்சிகளின் தொடர் முழுக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளிக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.