இன்னமும் கட்டுப்பாடா? இஸ்ரேல் மக்கள் கொந்தளிப்பு; வன்முறை!

இன்னமும் கட்டுப்பாடா? இஸ்ரேல் மக்கள் கொந்தளிப்பு; வன்முறை!

லகிலேயே முதல் நாடாக பெருவாரியான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதித்த இஸ்ரேலில் இன்னும் கட்டுப்பாடுகள் தொடர்வதை எதிர்த்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

ஒமிக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக இஸ்ரேலில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை கண்டித்து ரானனா நகரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் இறங்கினர். பெரும்பாலானோர் இரு தவணை தடுப்பூசி போட்டு மந்தை நோய் எதிர்ப்பு சக்தி நிலையை அடைந்த பிறகும், அரசு அறிவுறுத்தியபடி தற்போது பாதிக்கும் மேற்பட்டோர் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டும் கூட, கட்டுப்பாடுகள் இன்னும் தொடர்வது ஏன் என்பது அவர்களின் கேள்வி.பாதுகாப்புப்படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை விரட்ட முயன்றதால், பதற்றம் ஏற்பட்டது.

இஸ்ரேலில் மொத்தம் உள்ள 93 லட்சம் மக்களில் 41 லட்சம் பேருக்கும் அதிகமானோருக்கும் பூஸ்டர் டோஸாக 3வது தவணை பைசர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல் சில குறிப்பிட்ட நாடுகளை தவிர பெரும்பாலான நாடுகளுக்கு தமது எல்லைகளை மூடியே வைத்துள்ளது. அமெரிக்காவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் அந்நாட்டுடனான போக்குவரத்து தொடர்புகளை துண்டித்துக்கொள்வது குறித்து இஸ்ரேல் பரிசீலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!