செல்போன் செயலி மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டு! – தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் அறிமுகம்!

செல்போன் செயலி மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டு! – தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் அறிமுகம்!

மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்திருந்த ‘5 நிமிடங்களில் ரயில்வே டிக்கட்டுகள்’திட்டத்தின் படி, ரயில்வே பயணிகள் முன் பதிவற்ற பயணச்சீட்டுகள், சீசன் டிக்கட்டுகள் மற்றும் நடைமேடைச் சீட்டுக்களை தங்களது செல்பேசிகளை பயன்படுத்தி வாங்க 2018 ஏப்ரல் 14-ம் தேதி முதல் தெற்கு ரயில்வே, மதுரை கோட்டத்தில் “UTS ONMOBILE” என்னும் செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. GPS அடிப்படையிலான இந்த செயலியை ரயில் பயனாளர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான பணப் பரிவர்த்தனைக்கு ரயில்வேயின் பிரத்யேக ‘R-Wallet’–ல் ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திலோ அல்லது www.irctc.co.in இணையதளம் மூலமாகவோ பணம் செலுத்தலாம்.

 

ஆம்..இதுவரை காகிதப்பயணச்சீட்டு இல்லாமல் ரயில் பயணிகள் பயணம் செய்ய உதவும் வகையில் சென்னை புறநகர் ரயில் சேவைகளில் மட்டும் புழக்கத்தில் இருந்த இந்த செயலி தற்போது தெற்கு ரயில்வே முழுவதும் சுமார் 20 லட்சம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் மூலம் பயணிக்கும் பயணிகளுக்கு (மொத்த ரயில் பயணிகளில் இவர்களது எண்ணிக்கை சுமார் 91 சதவீதமாகும்) உதவும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த செயலி மூலம் காகிதம் இல்லாத ரயில் டிக்கட்டுகளை ரயில் நிலைய வளாகத்தில் இருந்து சுமார் 25 மீட்டர் முதல் 5 கிமீ தொலைவு வரை பதிவு செய்து தங்களது செல்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இந்த பயணிச் சீட்டை ஒரு அலைபேசியில் இருந்து மற்றொரு அலைபேசிக்கு எந்த முறையிலும் மாற்ற இயலாது. பயணச்சீட்டில்லா பயணிகள், டிக்கட் பரிசோதகரை பார்த்த பின்பு பயணச்கீட்டை பதிவு செய்தலை தவிர்க்கும் பொருட்டு ரயில் நிலைய வளாகம் மற்றும் ரயில்களில் பயணச்சீட்டினை இந்த செயலி மூலம் பதிவு செய்ய இயலாது.

இது குறித்து உதவி பெற பயணிகள் முக்கிய ரயில்நிலையங்களில் 24 மணி நேரம் இயங்கும் உதவி மையங்களையோ அல்லது utsonmbile.indianrail.gov.in என்ற இணையதளத்திலோ விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

error: Content is protected !!