மொராக்கோவில் நேற்றிரவு நிலநடுக்கம்.. 296 பேர் உயிரிழப்பு..!

மொராக்கோவில் நேற்றிரவு நிலநடுக்கம்.. 296 பேர் உயிரிழப்பு..!

நார்த் ஆப்பிரிக்க கன்ட்ரியில் உள்ள மொராக்கோவில் நேற்று இரவு 6.8 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 296 பேர் பலியாகியுள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. இதனை அந்நாட்டு அரசுத் தரப்பும் உறுதி செய்துள்ளது.

பூகம்பம் மாரகேஷ் பகுதியில் இருந்து தென்மேற்கில் உள்ள இடத்தில் பூமிக்கு அடியில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் பூகம்பம் சரியாக வெள்ளி இரவு 11.11 மணிக்கு நடந்துள்ளது. அதாவது நேற்று இரவு 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக மொராக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தை அடுத்து 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கம் அல்ஜீரியா வரை உணரப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தி ஊடகங்களுக்கு மாரகேஷை சேர்ந்த அப்தெல்ஹக் எல் அம்ரானி அளித்தப் பேட்டியில், “திடீரென கட்டிடம் பயங்கரமாகக் குலுங்கியது. நான் பூகம்பம் ஏற்பட்டுள்ளதை புரிந்து கொண்டேன். வெளியில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. அதிர்ச்சியில் நான் இருந்த கட்டிடத்திலிருந்து வெளியில் ஓடிவந்தேன். நிறைய பேர் என்னைப் போல் ஓடிவந்து சாலையில் தஞ்சம் புகுந்தனர். 10 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொலைபேசிகள் ஏதும் வேலை செய்யவில்லை. பின்னர் தொலைபேசி பயன்பாட்டுக்கு வந்தது. இருந்தாலும் நாங்கள் அனைவருமே சாலையிலேயே இருப்பது என உறுதி செய்தோம்” என்றார். மாரகேஷில் உள்ள மருத்துவமனைகள் காயமடைந்த மக்களால் நிரம்பி வழிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் உலக நாடுகளை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மொராக்கோ நிலநடுக்கம் தொடர்பாக பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மொராக்கோவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மிகவும் வேதனையளிக்கின்றன. இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இக்கட்டான நேரத்தில் மொராக்கோவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!