’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’- விமர்சனம்!

’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’- விமர்சனம்!

லைப்பிலேயே தெரிந்திருக்கும்- இது ஒரு தெலுங்கு டப்பிங் படமென்று . ஆனால் அதை தங்களால் முடிந்தளவுக்குத் தமிழ்ப் படமாகக் கொடுக்க ஆர்வப்பட்டிருக்கிறார்கள். எடுத்துக் கொண்ட கதையை நம்மாட்கள் புரிந்து கொள்ளவும், அதை ஒட்டிய காட்சியின் தன்மையையும் விட்டு விலகாமல் வசனங்களை பக்காவாக தமிழில் மொழி பெயர்த்து வழங்கி அசத்தி இருக்கிறார்கள்.. குறிப்பாக நவீனுக்குத் தமிழில் குரல் கொடுத்தவர் ,மைக் மோகனுக்கு வாய்ஸ் கொடுத்த எஸ். என். சுரேந்தர் பாணியில் பர்ஃபெக்ட்காக வழங்கி அசத்தி இருக்கிறார். கூடவே நாசர், துளசி போன்ற தமிழ் நடிகர், நடிகைக்கு அவர்களே டப்பிங் கொடுத்து `அட.. இது தமிழ் பட(மு)ம்தான் என்று நம்ப வைப்பத்தில் பாதி கிணறு தாண்டி விட்டார்கள்.. மீதி கிணறான திரைக்கதை வசனத்தில் மிகவும் கவனம் செலுத்தி குறிப்பாக அந்த ஹீரோவின் ஸ்டேன்ட் அப் காமெடிக்காக கண்ணியமான, சகலரும் ரசிக்கும்படியான இரட்டை அர்த்தக் காமெடி, ஃபேமிலி சென்டிமென்ட், லைஃப், ப்ரண்ட்ஷிப்.,செயற்கை கருத்தரித்தல் என எல்லா ஏரியாக்களிலும் பர்ஃபெக்டாக யோசித்து ஒரு பக்கா டீசண்டான படத்தைக் கொடுத்தவர்கள் டைட்டிலில் மட்டும் சொதப்பி விட்டார்கள்..!

கதை என்னவென்றால் லண்டனில் புகழ் பெற்ற செஃப் கலைஞராக இருக்கிறார் அன்விதா ஷெட்டி. (அனுஷ்கா ) தன் அம்மாவின் வாழக்கையில் நடந்த சிலபல கசப்பான அனுபவத்தால் காதல், திருமணம் போன்ற விஷயங்களை வெறுக்கிறார். தாயின் மறைவிற்கு பிறகு இந்தியா வரும் இடத்தில் தனது தனிமையை போக்க . திருமணம் எல்லாம் செய்யாமல் ஒரு ஆணின் உயிரணு மூலம் செயற்கை கருவுறுதல் மருத்துவ தொழில்நுட்பம் வழியாக குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்.
இதற்கு தகுதியான சிறந்த குடும்ப பின்னணி கொண்ட இளைஞரை தேடி அலைகிறார். இறுதியில் தன்னை விட வயது குறைந்த சித்து பொலி ஷெட்டி(நவீன் ) என்ற இளைஞனை சந்திக்கிறார். சித்து அன்விதா தன்னிடம் பழகுவதை காதல் என்று புரிந்து கொள்கிறான்.ஒரு கட்டதில் அன்விதா தன்னிடம் பழகுவது உயிரணு கொடைக்காகத்தான் என்பதை தெரிந்து கொள்கிறான். அதன் பிறகு வரும் பிரச்சனைகள் இப்படம்.

அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகியாக டூயட், அது, இது போன்ற வழியல் இல்லாமல் – அதுவும் நாயகனின் கைவிரல் கூட தன் மீது படாத ஒரு கேரக்டரில் நடித்து அசத்தியிருகிறார். குறிப்பாக தனிமையின் வலியை அமைதியாக புரிய வைத்து அவர் கேரியரில் வெளிவந்துள்ள படங்களில் இந்த படத்திற்கு முக்கிய பங்கை அடையச் செய்திருக்கிறார். ஹீரோவாக நாயகனாக நடித்திருக்கும் நவீன் பொலிஷெட்டி, இந்தக் கால இளசுகளின் பிரதிநிதியாக வந்து கவர்கிறார். வயதில் தன்னை விட மூத்த அனுஷ்கா மீது ஏற்பட்ட காதலை தனது அப்பா& அம்மாவிடம் எக்ஸ்போஸ் விதம் ரசிக்க வைக்கிறது. அதிலும் மேரேஜ் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் அனுஷ்காவின் முடிவை வேறு மாதிரியாக புரிந்துக்கொண்டு ரெடியாகும் சீனகளில் தூள் கிளப்பி விடுகிறார்.

கேமராமேன் நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியளிக்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறது. லண்டன் காட்சிகள் மட்டும் இன்றி இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளும் கொள்ளை அழகு. ரதனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் வழங்கி சிறப்பிக்கிறது .

இயற்கையான முறையில் கருத்தரித்து குழந்தை பெற்றுக் கொள்ளமுடியாத தம்பதிகளுக்கு, செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள உள்ள ஒரு வாய்ப்புதான் ஐ.வி.எஃப் (IVF – In Vitro Fertilisation) எனப்படும் செயற்கை முறை கருத்தரித்தல்.. ஆனால் அந்த சப்ஜெக்டை பின்னணியாக வைத்துக் கொண்டு
பெண்கள் என்றாலே திருமண உறவை சார்ந்து தான் இருக்க வேண்டுமா? என்ற கேள்வியையும் எழுப்பி ஆண் என்பவன் யார்? பெண்ணை அதிகாரம் செய்வதற்கா? இல்லை ‘எந்த பிரச்சனையிலும் நான் இருக்கிறேன் என்று பெண்ணின் கை பிடித்து அழைத்து செல்வதற்கு, சாய்ந்து கொள்ள ஒரு தோழமை என சொல்கிறது இப்படம்.

மொத்தத்தில் டைட்டிலைப் பார்க்காமல் போனால் நல்ல டைம்பாஸ் கொடுக்கும் படமிது!

மார்க் 3.5/5

error: Content is protected !!