32°C
விளம்பரம்
Advertisement

குட்டி ரேவதி இயக்கிய ‘“சிறகு” !

admin சேலம் Published: May 30, 2019 2 நிமிட வாசிப்பு Updated: May 31, 2019 Running News2
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




உறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை. இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம். சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரி வரை நீள்கிறது.எல்லோரும் இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது ‘சிறகு’.

‘மெட்ராஸ் ‘, ‘கபாலி’, ‘வடசென்னை ‘, ‘சண்டைக்கோழி-2 ‘, ‘பரியேறும் பெருமாள் ‘, ஆகிய படங்கள் மூலம் நமக்கு அறிமுகமான ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன். நடனத்திலும், யோகாவிலும் சிறந்த, அழகிய இளம் அக்ஷிதா இப்படத்தின் நாயகியாகிறார். டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காளி வெங்கட் நட்புக்காக இணைந்துள்ளார் .

காட்சிகளை கண்களுக்குக் குளுமையாக ஒளிப்பதிவு செய்திருப்பவர் ராஜா பட்டாச்சார்ஜி .’பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் நமக்கு அறிமுகமானவர்.

மனதை வருடும் பாடல், இதயத்தை நனைக்கும் பாடல், துள்ளலான பாடல் எனப் புகுந்து விளையாடியிருக்கிறார் அரோல் கொரேலி.

நேர்த்தியான படத்தொகுப்பைச் செய்திருப்பவர், அருண் குமார் வி .எஸ்.

திரைப்படத்துறையில் அனுபவம் மிக்க எக்சிகியூடிவ் புரொடியூசராக பல ஆண்டுகள் பணியாற்றிய மாலா மணியன் தனது FIRST COPY PRODUCTIONS (ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன்ஸ்) மூலம், ‘சிறகு’, தயாரித்துள்ளார்.

கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட குட்டி ரேவதி இப்படத்தை இயக்கியிருக்கிறார் .

தயாரிப்பு : மாலா மணியன் (First Copy Productions)

எழுத்து & இயக்கம் : குட்டி ரேவதி

ஒளிப்பதிவு : ராஜா பட்டச்சார்ஜி

இசை : அரோல் கொரேலி

படத்தொகுப்பு : அருண் குமார் VS

பாடல்கள் : குட்டி ரேவதி , அறிவு

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்