கிக் – விமர்சனம்!

கிக் – விமர்சனம்!

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்வதற்கு முக்கியக் காரணம் சந்தானம் & கோ- தான் என்று பலரும்ரும் சொன்னார்கள் அதில். லொள்ளு சபா மாறன், சுவாமிநாதன், மிட்டாய் ராஜேந்திரன், மனோகர் என தனது டீமை வைத்து அதகளமாக காமெடியை கொடுத்து கவர்ந்து விடுவார் சந்தானம். ஆனால் இந்த கிக்படத்தில் த சந்தானத்தின் முயற்சி எந்த வகையிலும் கை கொடுக்கவில்லை என்பது தான் சோகம். நீண்ட இடைவேளைக்கு பிறகு செந்திலை திரையில் பார்த்த ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றம். . அத்துடன் மன்சூர் அலிகான், வையாபுரி, ஒய்.ஜி. மகேந்திரன், கிரேன் மனோகர் என படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும், யாரும் நம்மை சிரிக்க வைக்க முயற்சிக் கூட செய்யவில்லை என்பதுதான் சோகம்.. அதிலும் சந்தானத்தின் ஸ்பெஷாலிட்டியான டபுள் மீனிங் காமெடி இதில் கொஞ்சம் தூக்கலாக இருப்பதால் குடும்பதோடு பார்க்க லாயக்கில்லாத படப் பட்டியலில் சேர்ந்து விட்டது.

அதாவது (தம்பி இராமையா நடத்தி வரும் விளம்பர நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் சந்தானம். விளம்பர ஆர்டர்கள் வாங்குவதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் அளவுக்கு செயல்பட்டு வருகிறார். இவருக்கு ஆப்போசிட் கேரக்டரில் செய்யும் தொழிலில் நீதி, நேர்மை, நியாயம் என்றெண்ணத்துடன் மனோபாலாவின் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் நாயகி தன்யா ஹோப். இவர்கள் கம்பெனிகளுக்கு இடையே விளம்பரம் பெறுவதில் போட்டா போட்டி நடக்கிறது. அந்த சமயத்தில் சந்தோஷ் கார் விளம்பரம் பெறுவதற்காக அதன் மார்க்கெட்டிங் ஹெட் செந்திலுக்கு முன் கவர்ச்சி நடிகையை டான்ஸ் ஆட வைக்கிறார். இதன் மூலம் அந்த விளம்பரத்தையும் பெற்று விடுகிறார். இதனிடையில் ஹீரோயின் தன்யாவை கண்டதும் நாயகன் சந்தானத்துக்கு வழக்கம் போல் காதல். ஆனால் சந்தானத்தின் கேரக்டர் நேமான சந்தோஷ் என்ற பெயரை மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு அவனை அடியோடு வெறுக்கிறார் நாயகி. இதனால் வேறு ஒரு பெயரில் தன்யாவுடன் பழகி லவ் பண்ணி வருகிறார். ஒருக்கட்டத்தில் உண்மை வெளிப்படும் தருணத்தில் தன்யா ஏமாற்றப்படுவது தெரிந்து மனமுடைகிறார். இப்படி படம் பயணிக்கும் பாதை ரொம்ப கரடு முரடாக கஷ்டம் கொடுத்து தலைவலியை ஏற்படுத்தி விடுவதே கிக் கதை.

ஹீரோ சந்தானம் தனது கவுன்டர் மழையை சீனுக்கு சீன் கொட்டிக் கொண்டே இருக்கிறார்.. ஆனால் ஸ்மைல் கூட வரவில்லை என்பதுதான் சோகம்..அதிலும் டபுள் மீனிங் டயலாக்-கை கொஞ்சம் ஒதுக்கி வைத்திருந்த சந்தானம் பல இடங்களில் முகம் சுளிக்க வைத்து விடுகிறார். தம்பி இராமையாவின் முதலிரவு மேட்டரெல்லாம் உவ்வே ரகம்.சூப்பர் பிகர் என்று ரசிகர்களை சொல்ல வைக்கும் நோக்கில் டாப் டக்கர் பிகராக வருகிறார் தான்யா ஹோப். ஆனால் சந்தானத்துக்கும் அவருக்கும் நடக்கும் காதலும் மோதலும் அரதபழசான சீனகளின் தொகுப்பு.

மேலும் கடுப்பேற்றும் விதத்தில் காமெடி செய்ய வேண்டும் என்பதற்காகவே பலரைப் படத்தில் போட்டிருக்கிறார்கள். மனோபாலாவின் சிஸ்டர் ரோலில் வரும் கோவை சரளா. அவரும் ரீல்ஸ் எடுக்கிறேன் என ஒரு பக்கம் வித்தியாச வித்தியாச மாடுலேசனில் பேசி கிச்சு கிச்சு மூட்ட ட்ரை பண்ணுகிறார். அத்துடன் சயிண்டிஸ்டாக வரும்பிரம்மானந்தம், அடல்ட் மாத்திரை மற்றும் கலர் சர்பத் பாட்டில்கள் சிலவற்றை வைத்துக் கொண்டு பண்ணும் சேட்டையும், டயலாக்கும் போனை கையிலெடுத்து நோண்ட வைத்து விடுகிறது.

அர்ஜுன் ஜன்யாவின் இசை. பின்னணி இசை மட்டும் குறை சொல்லமுடியாதபடி இருக்கிறது..

மற்றபடி கிக் – தலைச் சுற்றல்

மார்க் 2./5

error: Content is protected !!