கெழப்பய -விமர்சனம்

கெழப்பய -விமர்சனம்

மீபகாலமாக வரும் தமிழ் சினிமா, எந்த உணர்வை மக்களிடம் அதிகம் பரப்புகிறது? காதலா, கடமையா, வன்முறையா, ஆபாசத்தையா, மூட நம்பிக்கையா என்று கேள்விகள் பலவற்றை எழுப்பினால் கலாசார சீரழிவு, வன்முறை, மாணவர்களிடையே ஹீரோயிசம் என, சமூகத்தை சீரழிக்கும் செயல்கள் அனைத்திற்கும் வித்திடுவதில்தான், இன்றைய சினிமா முக்கிய இடத்தைப் பிடிக்கிறது என்று பலரும் கோரஸாகச் சொல்வார்கள் நாகரிகமற்ற வார்த்தைகள், ஆபாசமான அசைவுகள், அருவறுப்பான காட்சிகள், இரட்டை அர்த்தமுள்ள ஜோக்குகள் ஆகியவற்றையே கதையம்சங்களாக கொண்டு பெரும்பாலான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கு அர்த்தம், நல்ல படங்களே வெளிவருவதில்லை என்பதல்ல; அற்புதமான கதை, தொழில்நுட்ப நேர்த்தி, ஒளிப்பதிவு என, அனைத்து நல்ல அம்சங்களுடன் கூடிய படங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியான பட்டியலில் இடம் பிடிக்க ஆசைப்படும் படமே `கெழப்பய`!

அதாவது செக்யூரிட்டி வாட்ச்மேனாக ஒர்க் செய்து வாழ்க்கையை ஓட்டும் ஓல்ட் மேன் ஒருவர் வில்லேஜில் ஒத்தையடி பாதையில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருக்கும் போது அவர் பின் ஒரு கார் வருகிறது. அந்த காரில், கர்ப்பிணி பெண் மற்றும் ஐந்து ஆண்கள் பயணிக்கிறார்கள். ஆனால், அந்த காருக்கு வழிவிடாமல் முதியவர் சைக்கிளில் சென்றுக் கொண்டிருக்க, காரில் வருபவர்கள் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து வழி விட மறுக்கும் முதியவரை அடிக்கிறார்கள். ஆனாலும் முதியவர் அவர்களை முறைத்துக் கொண்டே மீண்டும் சைக்கிளை எடுத்து நடுரோடில் நிறுத்தி பழுது பார்க்கிறார். இதனால் காரில் வந்தவர்கள் ஆத்திரமடைந்து முதிவருக்கு தர்ம அடி கொடுக்கின்றனர். இந்த சமயத்தில் அங்கே வரும் விஏஓ உறியடி ஆனந்தராஜ் அவர்களை தடுத்து முதியவரை காப்பாற்றுகிறார். அடி பலமாக வாங்கியும் எதற்கும் அசைந்து கொடுக்காத முதியவர் நடுரோட்டில் சைக்கிளோடு உட்கார்ந்து கொண்டு எழுந்து வர மறுக்கிறார். இதனால் காரில் வந்தவர்கள் சைக்கிளை தூக்கி வீச முதியவர் அவர்கள் வந்த காரின் சாவியை எடுத்து புல்வெளியில் எறிந்து விடுகிறார். அதன் பின்னர் காரின் டயரை பஞ்சர் செய்து விடுகிறார். இவர்களை ஏன் போக விடாமல் தடுக்கிறார் என்பது புரியாமல் விஏஒ திகைக்கிறார். முதியவர் தன் செல்போனில் குறுந்தகவல் ஒன்றை அனுப்ப, அந்த இடத்திற்கு போலீசார் வருகின்றனர். இதனிடையே இந்த சண்டையை பார்க்கும் ஊர் மக்கள் முதியவரின் வீட்டில் தெரிவிக்கின்றனர். முதயவரின் மகனும், மருமகளும் அங்கு வந்து சேர்க்கிறார்கள். அனைவருக்கும் முதியவரின் செயல் வியப்பை ஏற்படுத்துகிறது. இறுதியில் முதியவர் ஏன் அவ்வாறு தடங்கல் செய்தார்? போலீசாரை வரவழைக்க காரணம் என்ன? காரில் வந்தவர்கள் என்ன ஆனார்கள்? போலீசார் கண்டுபிடித்த ரகசியம் என்ன? என்பதே இந்த கெழப்பய படக் கதை..!

டைட்டில் ரோலில் நடித்திருக்கும் கதிரேசகுமார், தன் ரோலை உணர்ந்து பர்ஃபெக்டாக நடித்து அசத்தியிருக்கிறார். காருக்கு வழிவிடாமல் தனது முடிவில் உறுதியாக இருக்கும் அவர், அடி வாங்கிய பிறகும் தனது நிலையை மாற்றிக்கொள்ளாமல் இருக்கும் போதே, காரின் பின்னணியில் ஏதோ ஒரு பெரிய விசயம் இருப்பதை நமக்கு உணர்த்தி விடுவதில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். கிருஷ்ணகுமார், விஜய ரனதீரா, கே.என்.ராஜேஷ், பேக்கரி முருகன், அனுதியா, உறியடி ஆனந்தராஜ் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களாக இருப்பதோடு, இயல்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார்கள்.

கேமராமேன் அஜித்குமார் கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்தும்படி காட்சிகளை படமாக்கியிருப்பது  மிகப்பெரிய பலம். மியூசிக் டைரக்டர் கெபி பெரும்பாலான இடங்களில் இசையை தவிர்த்துவிட்டு அமைதியை கடைப்பிடித்திருப்பது சொல்லும் காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்கிறது.

சிம்பிளாகச் சொல்வதானால் இதுவரை தமிழ் சினிமா இப்படி ஒரு படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பெரிய ஹீரோ ஹீரோயின், காமெடி நடிகர்கள் யாரும்.இல்லை , ஊட்டி, கொடைக் கானல், காஷ்மீர் போன்ற லொ கேஷன் கிடையாது. விசில் அடித்து ரசிக்க பாட்டும் கிடையாது ஆனாலும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு.மேல்.போவதே தெரியாமல் இருப்பதே பெரும் சாதனை…அதே சமயம் பெரியவர்களை மரியாதை குறைவாக திட்டும் போது பயன்படுத்தும் பெயர் கெழப்பய. ஆனால் இந்த படத்தில் முதியவர் நல்லது தான் செய்கிறார். முதியவர்களை அவமதிக்காமல் அதற்கேற்ற டைட்டிலை வைத்திருக்கலாம்.

சிம்பிளான கதை, லோ பட்ஜெட், வெயிட் இல்லாத ஆர்டிஸ்ட் , செகண்ட் ஆஃப்பில் போதிய அக்கறை இல்லாமை என்ற குறைகள் எல்லாம் இருந்தாலும் இது(வும்) ஒரு தமிழ் சினிமா என்றொரு லிஸ்டில் இணைந்து விடுவதென்னவோ நிஜம்

மார்க் 3/5

error: Content is protected !!