கண்ணகி’ – விமர்சனம்

கண்ணகி’ – விமர்சனம்

ண்ணகி என்ற பெயரைச் சொன்னாலே மன்னர் காலத்து கண்ணகி என்று நினைத்து விடாதீர்கள்.. கலை நேத்ரா நதி கீதா என்ற 4 பெயர்களின் முதல் எழுத்தை இணைத்து வெளிப்பட்டிருக்கும் இண்டர்நெட் காலத்து நவீன கண்ணகிகள் .இந்த நால்வரை வைத்து , திருமணம் எனும் பெயரில் பெண்களுக்குச் சமூகம் கட்டமைத்திருக்கும் வன்முறைகளையும் அலசி ஆராய முற்பட்டு நான்கு பெண்கள் அவர்களின் நான்கு கதைகள். ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திய கிளைமாக்ஸ் என சினிமாவை புதுகளம்மாக்கி மிரட்டி இருக்கிறார் அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர்.

படத்தின் கதை என்னவென்றால் மேரேஜூக்காக காத்திருக்கும் அம்மு அபிராமிக்கு ஏதேதோ காரணங்களால் திருமணம் தடைப்பட்டு வருகிறது. அதே சமயம் திருமணம் என்னும் சடங்கின் மீது நம்பிக்கை இல்லாத ஷாலின் சோயா, லிவிங் டூ கெதர் முறையில் ஓரு ஆணுடன் வாழ்ந்து வருகிறார். வேறொரு இடத்தில் காதலனால் கர்ப்பமடைந்த கீர்த்தி பாண்டியன், கருவை கலைக்க முடியாமல் கஷ்ட்டப்பட்டு வருகிறார். இதனிடையே கணவருடைய கட்டாயத்தால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு வரும் வித்யா பிரதீப் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறார். இப்படி நான்கு பெண்களும் ஒவ்வொரு பிரச்சனையோடு வாழ்ந்து வரும் நிலையில், இவர்கள் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்கள், இவர்களுடைய இந்த வாழ்க்கை பயணம் எப்படி செல்கிறது, எதில் போய் முடிகிறது, என்பதே கண்ணகி(யாம்).

அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் சோயா ஆகிய நான்கு பேரும் ஹீரோயின்கள் என்பதை உணர்ந்து தங்களது கதாபாத்திரத்தை வலுப்படுத்தும் அளவுக்கு நடிக்க முயன்ரு இருக்கிறார்கள்தான். அந்த வகையில்ல் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பிரச்சனை என்ற ரீதியில் கதை நகர்ந்தாலும், அப்பெண்களின் பிரச்சனைகளை ரசிகர்களிடம் மிக நேர்த்தியாக கடத்தும் வகையில் நான்கு நடிகைகளும் நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்ப்பதில் ஆர்வம் காட்டாமல் விட்டு விட்டார்கள் என்பதென்னவோ நிஜம். யஷ்வந்த் கிஷோர், வெற்றி, மயில்சாமி, ஆதேஷ் சுதாகர், மெளனிகா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்து படத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறார்கள்.

கேமராமேன் ராம்ஜி, எடிட்டர் சரத்குமார் மற்றும் ஷான் ரஹ்மான் இசை எல்லாமே இப்படத்தின் கதைக் களத்தைப் புரியாமலே பயணித்து பார்வையாளர்களைக் கடுப்பேற்றி அனுப்புதில் ஜெயித்து பெயில் மார்க் வாங்குவதல் ஜெயித்து விட்டார்கள்.

அதே சமயம் பெண்கள் உணர்வுள்ள மனிதராகப் பார்க்கப்படாமல் மணவாழ்வின் பொருளாகப் பார்க்கப்படுவதையும், திருமணம் எனும் பெயரில் பெண்களுக்குச் சமூகம் கட்டமைத்திருக்கும் வன்முறைகளையும் அலசி ஆராய முற்பட்ட அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர். நடிகர்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் குறிப்பாக’. பல உணர்வுபூர்வமான காட்சிகள் மோசமான நடிப்பினால் வீணடிக்கப்பட்டு இதெல்லாம் சினிமாவா? என்று கேட்க வைத்து விட்டார்கள்!

மார்க் 2.25/5

error: Content is protected !!