காமராஜர் – தமிழக முதல்வர் ஆன நாளின்று!

காமராஜர் – தமிழக முதல்வர் ஆன நாளின்று!

ந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அதைத்தொடர்ந்து முதல்வராக காமராஜர் 1954ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து அவர் தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்ற நாள் இன்று. 1954ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு ((13-04-1954) அன்று அவருக்கு மாநில முதல்வராக அப்போதைய கவர்னர் ஸ்ரீபிரகாசா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விருதுநகரைச் சேர்ந்த காமராஜர் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி மீது கொண்ட ஈடுபாட்டால், தனது 16ஆம் வயதில் காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக அரசியலில் இணைந்து பணியாற்றிய காமராஜ் தனது 36வயது வயதில் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உயர்ந்தார். வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இறங்கிய காமராஜர், அதற்காக ஒன்பது வருட சிறை வாழ்க்கை அனுபவித்தவர். இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றது. அக்காலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜாஜி சிறிது காலத்திலேயே கட்சிக்குள்ளே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் முதலமைச்சர் பதவியைத் துறந்தார். இதையடுத்து அப்போது மாகாண காங்கிர கமிட்டி தலைவராக இருந்த காமராஜ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 13-4-1954ல் மாநில முதல்வராக பதவி ஏற்றார். அதன்பிறகே தேர்லில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தனது முதல்வர் பதவியை நிரந்தரமாக்கினார். 10.6.1954 அன்று நடைபெற்ற குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜர் தமிழ்நாட்டில் 9 ஆண்டுகாலம் பொற்கால ஆட்சியை வழங்கினார்.

காமராஜர், தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தினார். இவர் காலத்தில் தொடங்கிய மதிய உணவுத் திட்டம் இன்று தமிழகம் கல்வியறிவில் சிறந்து விளங்க முக்கியக் காரணமாக உள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. மேலும் விவசாயம் மற்றும் தொழில் வளம் பெருகிட இந்த ஆட்சி உதவியது. தமிழக அரசியலில் மிக முக்கியமான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி இக்காலத்தில் ஏற்பட்டதால் அரசியல் ஆர்வலர்கள், பெரும்பாலானவர்கள் கட்சி, கொள்கை வேறுபாடின்றி பாராட்டும் ‘பொற் கால ஆட்சி’ முக்கியக் கூறாக விளங்கியது.

அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் மூன்றாவது முதல்வராக 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை என ஒன்பது ஆண்டுகளுக்கு பதவி வகித்த காமராஜர் ஆட்சி தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு. காமராஜ் முதல்வர் பதவியில் இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்கள்தான் இன்றுவரை தமிழகத்துக்கு வாழ்வாதாரத்தை வழங்கி வருகிறது. அவரது எளிமையான வாழ்க்கை அரசியல் கட்சி தலைவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.

10.6.1954 அன்று நடைபெற்ற குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜர், முன்னதாகவே 13-4-1954ல் மாநில முதல்வராக பதவி ஏற்றார். அதன்பிறகே தேர்லில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தனது முதல்வர் பதவியை நிரந்தரமாக்கினார்.

அந்த வகையில் 1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளான ஏப் 13ம் தேதி முதல்வர் பொறுப்பையேற்கப் புறப்பட்டார் காமராஜ். திருமலைப் பிள்ளை வீதி திமிலோகப்பட்டது. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்று வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார். திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து “சைரன்” என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். “அது என்னையா சத்தம்?” காமராஜ்.

“ஐயா, இது முதலமைச்சர் செல்லும் போது போகுவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி. முன்னால் முதல்வர்கள் பிரகாசம் ஐயா, ஓமந்தாரையா, குமாரசாமிராஜா ஐயா, ராஜாஜி ஐயா எல்லோர் காலத்திலுமிருந்து வருகிற சம்பிரதாயம்” என்றார் காவல்துறை அதிகாரி.

“இதோ பாருங்க… இதுக்கு முன்னால இந்த சம்பிரதாயமெல்லாம் இருந்திருக்கலாம்… எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். சத்தம் போடாமப் போங்க” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

அடுத்த கோடம்பாக்கம் பெருவீதி – நுங்கம்பாக்கம் பெரு வீதி சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவலர் இவர் சென்ற வண்டியை நிறுத்தி பின் இவரது வண்டி செல்ல அனுமதியளித்தார். ஆனால் அவர் காருக்கு முன் நின்ற காவல்துறை மேலதிகாரிகளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன். ஆனால் காமராஜரோ அந்த நடுத்தெருக் காவாலரின் கடமையாற்றலைக் கண்டு உள்ளம் புளகித்தார்.

காவலரைத் தாண்டி இவரது கார் செல்லும் போதுதான் காவலருக்கு விஷயமே புரிந்தது. நடு நடுங்கிப் போனார். முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமே என்று பத்றிப்போனார். காவல்துறை மேலதிகாரிகளின் சினத்துக்கு ஆளாகி விட்டோமே எனவும் கலங்கினார்.

அன்று மாலை காமராஜர் வீடு திருப்பியபோது கலவரத்துடன் வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்ட காவலரை தட்டிக்கொடுத்த காமராஜ் அவரது கடமை உணர்வை பாரட்டியபோது தான் காவலரின் உள்ளம் சாந்தியுற்றது.

அதன் பின் காமராஜ் முதலமைச்சராக இருந்தவரை அவருக்கு பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை வண்டிகள் ஒலி எழுப்பியதே இல்லை. தன்னை தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களில் ஒருவராகவே தன்னைப் பாவித்துக் கொண்டார் அந்த கர்மவீரர்!

வாத்தீ அகஸ்தீஸ்வரன்
.

error: Content is protected !!