32°C
விளம்பரம்
Advertisement

தமிழக அரசின் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அதிகாரி பணி!

admin சேலம் Published: June 27, 2019 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




தமிழக அரசின் தடய அறிவியல் துறையில் நிரப்பப்பட உள்ள 64 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப் பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 64

பணி: Junior Scientific Officer
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Chemistry – 40
2. Biology – 14
3. Physics – 06
4. Physics and Chemistry (Division:Computer Forensic Science) – 04

சம்பளம்: மாதம் ரூ.36,900 -1,16,600

வயதுவரம்பு: 0 1.07.2019 அடிப்படையில் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தடய அறிவிய்ல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது விண்ணப்பிக்கும் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150. விண்ணப்பக் கட்டணம் ரூ.100. ஒரு முறை பதிவிக் கட்டணம் செலுத்தி பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_20_notyfn_JSO.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.07.2019

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்